Home /News /tamil-nadu /

திருச்சியில் எடப்பாடி பழனிசாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருச்சியில் எடப்பாடி பழனிசாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Edappadi Palanisamy Protest | திருச்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசை கண்டித்தும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி தலைமையில் நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி ரயில் நிலைய சந்திப்பு அருகே, தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, சிவபதி வளர்மதி, நல்லுசாமி, முன்னாள் எம்பிக்கள் குமார், ரத்தினவேல் உள்ளிட்ட மேடையில் இருந்த  நிர்வாகிகள், 25 பேர் மீது கண்டோன்ட்மென்ட் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also Read : நீங்க வாங்கின கடனுக்கு நாங்கள் மீட்டர் மேல் வட்டி கட்டி வருகிறோம்... பேரவையில் துரைமுருகன் பேச்சால் கலகலப்பு

'சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், ஐந்து அல்லது அதற்கு மேலான நபர்கள் அதை கலைக்க கட்டளையிட்ட பின்னர் கூடுவது அல்லது தொடர்வது, அரசு ஊழியரால் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்படியாமை, பொதுப்பாதையில் கூடுவதற்கு தடை (IPC Sec 143, 151, 188, 283)' ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.

சொத்து வரி உயர்வுக்கு, ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தி, எதிர்ப்பை பதிவு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Edappadi palanisamy

அடுத்த செய்தி