Sunday Curfew Fine | முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றிய 620க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு... திருச்சி மாநகர காவல் துறை நடவடிக்கை

Sunday Curfew Fine | முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றிய 620க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு... திருச்சி மாநகர காவல் துறை நடவடிக்கை

முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றியவர்கள் மீதும் சமூக இடைவெளி இன்றி செயல்பட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றியவர்கள் மீதும் சமூக இடைவெளி இன்றி செயல்பட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

  • Share this:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஞாயிறு முழு ஊரடங்கு நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த திருச்சி மாநகரின் அனைத்து பகுதியிலும் துணை ஆணையர் தலைமையில் 450 க்கு மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்படி நிலையான சோதனைச் சாவடிகள் 8 மற்றும் தற்காலிக சோதனைச் சாவடிகள் 24 என 32 இடங்களிலும் ரோந்து வாகனங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 620க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெறிமுறைகளை மீறி செயல்பட்ட 2 வணிக வளாகங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.



மேலும் படிக்க... ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடியும் மீன்பிடித்தும் மகிழ்ந்த இளைஞர்கள்

அதே நேரத்தில் அரசு நெறிமுறைகளை விதிமுறைகளை பின்பற்றி முழு ஊரடங்கு அமல்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பொது மக்களுக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் நன்றி தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: