• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கரடு முரடான பாதை.. மாரடைப்பால் பாதிவழியில் பறிபோன உயிர் - இறந்தவரின் சடலத்தை 2 கி.மீ தோளில் சுமக்கும் அவலநிலை

கரடு முரடான பாதை.. மாரடைப்பால் பாதிவழியில் பறிபோன உயிர் - இறந்தவரின் சடலத்தை 2 கி.மீ தோளில் சுமக்கும் அவலநிலை

கருத்தாகோடாங்கிபட்டி

கருத்தாகோடாங்கிபட்டி

மணப்பாறை அருகே உள்ள கருத்தாகோடாங்கிபட்டிக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

  • Share this:
    மணப்பாறையில் சடலத்தை 2 கிலோமீட்டர் தூக்கிச்சென்று அடக்கம் செய்த உறவினர்களின் அவல நிலை 

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து புத்தாநத்தம் அருகே உள்ள கருத்தாகோடாங்கிபட்டி மேற்குத் தெருவில் சுமார் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவரவர் சொந்த இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு சாலை வசதி வேண்டி கடந்த பத்து வருட காலமாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சாலை வசதி செய்து தராத நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராசு கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாசாம்மாள் இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 1.30 மணிக்கு  ராசுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சரியான சாலை வசதி இல்லை. இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலையில் அவரை தோளில் சுமந்து கொண்டு இரண்டு கிலோமீட்டர் நடக்க முயற்சித்தனர். மாரடைப்பின் காரணமாக பாதிவழியில் இறந்துவிட்டார்.

    Also Read: பிரசவத்தின்போது ஆசிரியை மரணம் - தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

    மாரடைப்பால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய  ஆம்புலன்ஸ் மற்றும் இறுதி ஊர்வல வாகனங்களை உதவி கேட்டால் சாலை வசதி இல்லாத நிலையில் கல் குன்று வழியாக வாகனங்களை ஓட்டினால் பழுது ஏற்படும் என்று கூறி வாகனங்களை  அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆகையால் உயிரிழந்தவரின் உடலை அந்த காலம் முறையில் பாடைகட்டி கரடுமுரடான சாலையில் 2 கிலோமீட்டர் தூக்கி செல்லும் அடக்கம் செய்துள்ளனர். இதுமட்டுமின்றி பள்ளி கல்லூரி செல்ல  கூடிய  மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் கூட பாடம் படிக்க  முடியவில்லை என கூறி வருத்தம் தெரிவிக்கிறார்கள் .சாலை வசதி செய்து தரக்கோரி  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் பலமுறை மாவட்ட ஆட்சியர்,மற்றும் வட்டாட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளின்  அலட்சியப் போக்கினால்  ஒரு உயிர் பிரிந்துள்ளது. இதற்கு அரசுதான் காரணம் என  கண்ணீருடன் கூறிய உறவினர்கள் . புதிய அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் ஊருக்கு செல்லும் சாலையை சீரமைத்து  தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

    செய்தியாளர்: ராமன் ( மணப்பாறை)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: