கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான
உயர்நீதிமன்ற உத்தரவுகளை குப்பையில் போட்டு விட்டது தமிழக அரசு என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினார்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் வடக்குறுக்கி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமித்து அதில் மண்டபம் கட்டியுள்ளதாகவும் கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிட வலியுறுத்தி பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று அந்த பகுதியை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், ‘தமிழகத்தில் 44 ஆயிரம் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில் தற்போது 4 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 48 ஆயிரம் ஏக்கர் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை கோவில் இடங்களை மீட்க உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை குப்பையில் போட்டு விட்டது தமிழக அரசு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நான் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். ஒவ்வொரு ஊரிலும் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த தகவலை தரும்படி கேட்டுள்ளேன். தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் சேகர்பாபுவிற்கு உண்டா. அர்ச்சகர்களை கோவில்களில் எப்படி அவர்களால் நியமிக்க முடியும் என்று கூறினார்.இதே போல் பாரத பிரதமரை இழிவாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்தியாளர்: ராமன் ( மணப்பாறை)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Christ Church, DMK, Hindu Temple, HRaja, Mosque, Tamilnadu