வெறுங்காலுடன் ஓடி கஷ்டப்பட்டவர்.. இரண்டாவது முறையாக ஒலிம்பிக் சென்றுள்ளான் - ஆரோக்கிய ராஜீவ் அம்மா நெகிழ்ச்சி

ஆரோக்கிய ராஜூவ் குடும்பத்தினர்

வெறுங்காலுடன் ஓடியவர் இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் ஓடியுள்ளார் என ஒலிம்பிக் தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் அம்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

  • Share this:
ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக என் மகன் பங்கேற்றது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் தாயார் கூறியுள்ளார்.

உலக விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், தடகளப் பிரிவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஆண்கள்  4×400 தொடர் ஓட்டத்தில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் பங்கேற்றார்.தொடர் ஓட்டத்தில் மூன்றாவது வீரராக களத்தில் ஓடிய ராஜுவ் சிறந்த பங்களிப்பைக் கொடுத்தார். ஆனால், ஓரிரு வினாடிகளால்  இந்திய அணி  தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள் அடுத்தச்சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில், இந்திய அணி 4வது இடத்தை பிடித்தது. ஆசிய அளவிலான சாதனையைப் புரிந்துள்ளது. காமன்வெல்த், ஆசிய போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கம் நிச்சயம் என்கிற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

ஓலிம்பிக்கில் ஆரோக்கிய ராஜீவ் பங்கேற்ற இந்திய அணி ஓடியதை  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள், அப்பகுதியினர்  ஆர்வமுடன் தொலைக்காட்சியில் கண்டனர். உணர்ச்சிப் பெருக்கில்  அருகில் இருந்து உற்சாகப்படுத்துவது போல், கைதட்டி, ஊக்கமளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ஆறு வயதில் ஆரோக்கியராஜீவ் ஓடத் தொடங்கிய போது எங்களுக்கு வசதியில்லை. எந்த வேலையும் தெரியாத நிலையில் கூலி வேலைக்கு சென்றேன். அப்போது வெறுங்காலுடன் ஓடிய என் மகன் ரொம்ப கஷ்டப்பட்டு, இப்போது ஒலிம்பிக்கில் 2வது முறையாக ஓடியுள்ளார். வினாடிகளில் வாய்ப்பை இழந்துள்ளோம்.கடந்த ஒலிம்பிக்கில் 8வது இடம், இப்போது 4வது இடமும் பெற்றுள்ளார். ரொம்ப பெருமையா  மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று ஒலிம்பிக் தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் தாய் லில்லி சந்திரா நமது செய்தியாளரிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து, கடின உழைப்பு,  விடா முயற்சியில் இருமுறை ஒலிம்பிக்கில் தடம் பதித்துள்ளார்.தற்போது, இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் ஆரோக்கிய ராஜுவ், ஆசிய, காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு அர்ஜுணா விருது, நீயூஸ் 18 தமிழ்நாட்டின் மகுடம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

 

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Ramprasath H
First published: