நாங்க திருவிழாவை துவங்கிட்டோம்; இன்றே நன்றி அறிவிப்பு போஸ்டர் அடித்த அரசியல் கட்சியினர்!

நாங்க திருவிழாவை துவங்கிட்டோம்; இன்றே நன்றி அறிவிப்பு போஸ்டர் அடித்த அரசியல் கட்சியினர்!

நன்றி தெரிவித்து போஸ்டர்கள்

அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ப.குமாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தற்காக நன்றி தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் தயார் செய்துள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் நாளை காலை வெளியாக உள்ள நிலையில், திருவெறும்பூரில் அரசியல் கட்சியினர் இன்றே திருவிழாவை துவங்கியுள்ளனர்.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. அசாமில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உட்சபட்சமாக 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில் கடந்த ஏப்.29ம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 8-ம் கட்ட வாக்குப் பதிவு முடிவு பெற்றவுடன், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. அதில், திமுக கூட்டணியே வெற்றிபெறும் என்று அனைத்து நிறுவனங்களும் கணித்துள்ளன. இதைத்தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன. கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி முகவர்கள் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்திய பின் அறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையே நாளை காலை தான் நடைபெற உள்ள நிலையில், திருவெறும்பூரில் அரசியல் கட்சியினர் தேர்தல் முடிவுகள் நாளை மாலை வந்தாலும் சரி, இரவு வந்தாலும் சரி நாங்கள் இன்றே திருவிழாவை தொடங்குகிறோம் என மும்முரமாக உள்ளனர். அதன்படி, வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வேட்பாளர்கள் சார்பில் போஸ்டர்கள் தயார் செய்த நிர்வாகிகள் அதனை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதன்படி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் போஸ்டர்களில், திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ப.குமாரை பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தற்காக நன்றி தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் தயார் செய்துள்ள போஸ்டரும், இதேபோல், திமுக சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற வைத்ததற்காக நன்றி தெரிவித்து திமுக நிர்வாகிகள் தயார் செய்துள்ள போஸ்டரும் வைரலாக பரவி வருகின்றன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: