• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக பார்க்காததா..? எமர்ஜென்சியையே பார்த்த கட்சி.. அண்ணாமலைப் பேச்சுக்கு கே.என்.நேரு பதிலடி

திமுக பார்க்காததா..? எமர்ஜென்சியையே பார்த்த கட்சி.. அண்ணாமலைப் பேச்சுக்கு கே.என்.நேரு பதிலடி

கே.என்.நேரு

கே.என்.நேரு

அண்ணாமலை புதிதாக தலைவராக பொறுப்பேற்றுள்ளதால், கவனம் பெறுவதற்காக பேசி வருகிறார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

  • Share this:
திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் ஆதார மேம்பாட்டுத் திட்டத்தில்  தரைமட்டத் தொட்டி கட்டுதல்,பெரியார் நகர், கம்பரசம்பேட்டை நீர் சேகரிப்பு கிணற்றில் புதிதாக நீர் சுற்றுவட்ட குழாய்கள் அமைத்தல், மோட்டார் பம்புசெட் டீசல் ஜெனரேட்டர் சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி, நீர் பரிசோதனை ஆய்வகம் மற்றும் நடை பாலம் அமைக்கும் பணி என ₹ 28 கோடியே 42 லட்சம் மதிப்பிலான பணிகளை திருச்சி உறையூர் காவல் நிலையம் அருகே குடிநீர்த் தொட்டி வளாகத்தில் தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

Also read: நேற்று ஆர்ப்பாட்டம், இன்று டெல்லி பயணம் - அண்ணாமலையின் அடுத்த மூவ்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓராண்டிற்குள் திருச்சி மாநகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட் குடிநீர் தடையின்றி 24 மணி நேரமும் வழங்கப்படும். அதற்கேற்ப திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி, உய்யகொண்டான் ஆறுகளில் கழிவுகள் கலப்பதை நிறுத்தவும் சென்னையைப் போல் குழாய் அமைத்து கழிவு நீரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அப்போது, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சு குறித்து கேட்டதற்கு, திமுக பார்க்காததா..? எமர்ஜென்சியையே பார்த்த கட்சி. திமுகவினர் எப்போதும் எதிர்ப்பை சமாளிக்கும் திறனோடுதான் இருப்பார்கள். தப்பு செஞ்சா தானே நடவடிக்கை எடுப்பார்கள்.. எடுக்கட்டும்.

அண்ணாமலை புதுசா தலைவராயிருக்கிறார். ஆகையால் கவனம் பெறுவதற்காக இப்படியெல்லாம் பேசி வருகிறார் என்றார்.

முன்னதாக, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடாக அரசு அணை கட்டும் முயற்சியை கைவிடக் கோரி தமிழ்நாடு பா.ஜ.கவினர் மாநில தலைவர் அண்ணாமலையில் தஞ்சாவூரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது பேசிய அண்ணாமலை, காழ்ப்புணர்ச்சியோடு பேசினால், அடிமட்டம் வரை செல்வோம். பிஸினசில் கை வைப்போம். தயாநிதி மாறனைப் பற்றி எல்லாம் தெரியும். சம்மட்டி அடியாக பதிலடி கொடுப்போம்  என்று அண்ணாமலை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: