2006-ல் முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்ட அங்கயற்கண்ணி - மீண்டும் பணி கேட்டு ஸ்டாலினுக்கு கோரிக்கை

அங்கயற்கண்ணி

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையால் திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் ஓதுவாராக 2006ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டார்.

  • Share this:
முதல் பெண் ஒதுவாராக திருச்சி உறையூர் அருள்மிகு  பஞ்சவர்ணசாமி கோயிலில் அரசால் பணி நியமனம் பெற்ற  அங்கயற்கண்ணி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு  ஊதியம், குடும்ப சூழலால் பணியைத் தொடரவில்லை. மீண்டும் ஓதுவார் பணி கேட்டு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் செம்பட்டு கிராமம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அங்கயற்கண்ணி. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகளான அங்கயற்கண்ணிக்கு சிறுமியாய் இருந்த போதே, செம்பட்டு அங்காளம்மன் கோயிலில் பக்திப் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் ஏற்பட்டது.  பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு  திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் திருமுறைகள் குறித்த 3 ஆண்டுகள் படித்து, சிறப்பு நிலையில் தேர்ச்சி பெற்றார்.

தேவாரம், திருவாசகப் பாடல்களை மனமுருகப் பாடி வந்தார். பலரின் பாராட்டுதலைப் பெற்றார். தொடர்ந்து, இறைப்பணியில் தொடரும் வகையில், ஒதுவார் பணி கேட்டு இந்து சமய அறநியத்துறைக்கு விண்ணப்பித்தார். இதையடுத்து நேர்காணல் நடைபெற்று,  அனைத்து சாதியினரும் அர்ச்சககர் ஆகலாம் என்கிற சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையால் திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் ஓதுவாராக 2006ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டார்.

முதல் பெண் ஒதுவாராக பணி வாய்ப்பை பெற்றாலும், மாதம் ₹ 1, 500 ஊதியத்தில் 2013ம் ஆண்டு வரை பணியாற்றினார். குறைந்த ஊதியத்தால் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. சக ஊழியர்களுக்கு கிடைத்து ஊதிய உயர்வு தனக்கு மட்டும் மறுக்கப்பட்டது. ஊதிய உயர்வு கேட்டு பல முறை முயற்சித்தும் கிடைக்கவில்லை என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, குடும்ப சூழ்நிலை, திருமணம், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் நாமக்கல் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் திருச்சியில் ஓதுவார் பணியைத் தொடர முடியாமல் போனது. கோயிலில் பாட முடியாதா நிலையில்,  தற்போது வீட்டில் திருமுறைகளைப் பாடிக் கொண்டுள்ளார்.

இத்தகைய சூழலில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தின் கீழ் அண்மையில் 58 பேர் அர்ச்சகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பிற பணி நிலைகளில் நியமனம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முதல் தனக்கு மீண்டும் ஓதுவார் பணி வழங்க அங்கயற்கண்ணி  கோரிக்கை விடுத்து வருவதாக கூறியுள்ளார். தற்போது தமிழ்நாடு அரசு வழங்க அனைத்து சாதியினருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ள அளவற்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் தனக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். அரசு இசைப்பள்ளியில் பயிற்சி முடித்தவர்களுக்கு வயது வரம்பைத் தளர்த்தி அரசுப் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: