Home /News /tamil-nadu /

திருச்சி மேயர் இவர் தான்? அமைச்சர் கே.என்.நேரு சூசகம்

திருச்சி மேயர் இவர் தான்? அமைச்சர் கே.என்.நேரு சூசகம்

அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

KN Nerhu | DMK | திருச்சி மாநகராட்சி, 27வது வார்டு பூத் கமிட்டி மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் தென்னூரில் இன்றிரவு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  கடந்த 28ம்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் இன்று மாலையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 15 தினங்களே எஞ்சியுள்ளதால் வேட்பு மனு செய்த வேட்பாளர்களும் வேட்புமனு இன்று செய்யவுள்ள வேட்பாளர்களுமாக தீவிரமாக பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாநகராட்சி, 27வது வார்டு பூத் கமிட்டி மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் தென்னூரில் இன்றிரவு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், 27வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்பழகன் மற்றும், 23வது வார்டில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுரேஷ் ஆகியோருக்கு அமைச்சர் நேரு வாக்கு சேகரித்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகையில், "திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், 'அன்பழகனுக்கு மேயர் பதவி வேண்டும்' என்று முதலமைச்சரிடம் கேட்கும் இடத்தில் நான் உள்ளேன். எனவே, அன்பழகன் மேயராக வாய்ப்புள்ளது" என்றார்.

செய்தியாளர் : விஜயகோபால், திருச்சி

Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து இங்கே க்ளிக் செய்யவும்.
Published by:Vijay R
First published:

Tags: DMK, KN Nerhu, Local Body Election 2022, Trichy

அடுத்த செய்தி