• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • K N Nehru | திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி... எல்லா புகழும் தலைவருக்கே: கே.என்.நேரு பெருமிதம்

K N Nehru | திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி... எல்லா புகழும் தலைவருக்கே: கே.என்.நேரு பெருமிதம்

கே.என்.நேரு

கே.என்.நேரு

தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். குறிப்பாக, திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். உய்யகொண்டான் ஆறு சீரமைப்போம். குடிநீர், சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம். ஏரி, குளங்களை தூர் வாருவோம் என்று கே.என்.நேரு கூறியுள்ளார்.

  • Share this:
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளான திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி) ஆகிய 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, திருச்சி மேற்கில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திருவெறும்பூரில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்  அன்பில் மகேஷ், லால்குடியில் சவுந்திரபாண்டியன், துறையூரில் ஸ்டாலின் குமார், முசிறியில் வடக்கு மாவட்டச் செயலாளர்  தியாகராஜன், திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜ், மண்ணச்சநல்லூரில் கதிரவன், மணப்பாறையில் மமக அப்துல்சமது ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

நேற்று திருச்சி மேற்கு தொகுதியில் அனைத்து சுற்றுகளும் எண்ணப்பட்டு, வெற்றி உறுதியானதையடுத்து வேட்பாளரான  கே.என்.நேரு இரவு 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜமால் முகமது கல்லூரிக்கு வந்தார். ஆனால் திருச்சி மேற்கு தொகுதியில் 9 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதாகின. அதனால் இரவு 11 மணி வரை காத்திருந்தார். அவற்றை திறக்க முடியாததால், வாக்குகளை எண்ண முடியாததால் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதேநேரத்தில் அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டு, 80,000 வாக்குகளுக்கு மேல் திமுக முதன்மைச் செயாலாள.ள் கே.என்.நேரு வித்தியாசத்தில் இருந்தார்.

அவர் காத்திருந்த நேரத்தில் மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவினர் கே.என்.நேருவிடம் வாழ்த்து பெற்றனர்.
பின்னர் ஒருவழியாக வாக்கு எண்ணப்பட்டு, திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற திமுக முதன்மைச் செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது. எல்லா புகழும் தலைவருக்கே. தலைவர் முக ஸ்டாலினுக்கே. தேர்தல்  அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். குறிப்பாக, திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். உய்யகொண்டான் ஆறு சீரமைப்போம். குடிநீர், சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம். ஏரி, குளங்களை தூர் வாருவோம்” என்று உறுதி அளித்தார்.

மேலும் படிக்க... நண்பர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த்!

அதன் பின்னர் ஆளுங்கட்சி அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளது குறித்த கேள்விக்கு, இது சகஜம் தானே என்றார். திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணனிடம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். பின்னர் இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். மலைக்கோட்டைக்கு ரோப் கார் வசதி உள்ளிட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றுவோம். சீரழிந்த திருச்சியை சீர்மிகு மாற்றுவோம். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்றார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: