Home /News /tamil-nadu /

சைடு வாங்கிய வீல்.. க்ராஷான பாடி... சமயபுரம் பக்தர்களை அலறவைக்கும் ஆக்சிடெண்ட் ஆட்டோ

சைடு வாங்கிய வீல்.. க்ராஷான பாடி... சமயபுரம் பக்தர்களை அலறவைக்கும் ஆக்சிடெண்ட் ஆட்டோ

விபத்தில் நெளிந்த ஆட்டோ

விபத்தில் நெளிந்த ஆட்டோ

மதுபழக்கத்தால் விபத்தில் நெளிந்து போன ஆட்டோவை வைத்துக்கொண்டு பொதுமக்களை வைத்து ஆபத்தான முறையில் சவாரி செய்துவரும் மதுபிரியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மருதூர் ஊராட்சியை சேர்ந்தவர் ராஜா மகன் சேகர் ( 38).  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.  இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து கடந்த 8 ஆண்டுகளாக இப்பகுதியில்  ஆட்டோ சவாரி செய்து வருகிறார்.  இந்த ஆட்டோ ஓட்டுனர் சேகருக்கு மது பழக்கம் அதிகளவில் இருக்குதாம்.  மதுபோதையில் சக ஆட்டோ டிரைவர் மட்டுமல்லாது யாராக இருந்தாலும் தகாத வார்த்தையில் கடுமையாக திட்டும் பழக்கமுள்ளவர் என கூறுகின்றனர்.



    இதனால் இப்பகுதியிலுள்ள ஆட்டோ சங்கங்கள் எவற்றிலும் இவரை அடிப்படை உறுப்பினராக கூட சேர்த்துக் கொள்வதில்லை. இதனால் வெறுப்படைந்த ராஜா நானே ராஜா நானே மந்திரி என்ற நிலையில் மனம் போன போக்கில் ஆட்டோ சவாரி செய்து வருகிறார்.

    ALSO READ |  குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதா? திருமண விழாவில் குவாட்டர் சிக்கன் இலவசம் என அறிவித்த மாப்பிள்ளை வீட்டார்

    இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சமயபுரம் பகுதியில் வேலை முடித்து விட்டு தனது ஆட்டோ மூலம் தனது ஊரான மருதூருக்கு மதுபோதையில் அவரே ஆட்டோவை ஓட்டிச்  சென்ற போது ஆட்டோ விபத்துக்குள்ளானதில் ஆட்டோவின் முகப்பு கண்ணாடி உடைந்தும், ஆட்டோவும் நொருங்கி, நெளிந்து காணப்பட்டது.



    ஆட்டோவின் முகப்பு கண்ணாடி , இருக்கைகள் , மேல் பகுதி என அனைத்தும் முற்றிலும் சேதாரம் ஆகியுள்ளது. எனினும் எவ்வித பயமும் இன்றி சேதமான ஆட்டோவை கொண்டு மீண்டும் இயக்கி வருகின்றார். இந்த ஆட்டோவை வைத்துக்கொண்டு சமயபுரம் பகுதியில் குறிப்பாக சமயபுரம் மற்றும் ஆதி மாரியம்மன் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களை ஏற்றிக்கொண்டு சவாரி செல்கின்றார்.



    இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆட்டோ ஓட்டுனரின் செயலை காவல் துறை கட்டுப்படுத்த வேண்டும். இப்படி பொதுமக்களை வைத்து பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் வரும் என முன்னெச்சரிக்கையாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் : கதிரவன் இளையான்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tasmac, Trichy

    அடுத்த செய்தி