• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்க திருச்சி 'அகோரித் திருமணம்'

தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்க திருச்சி 'அகோரித் திருமணம்'

அகோரித் திருமணம்

அகோரித் திருமணம்

திருச்சியில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான திருமணம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த அபூர்வ திருமணம் பற்றிய தொகுப்பை தற்போது காணலாம்,

  • Share this:
அகோரிகள் என்ற வார்த்தை தமிழகத்தில் பரவலாக அறியப்படாதபோது 2009-ம் ஆண்டில் வெளியான நான் கடவுள் திரைப்படம் அவர்களின் வாழ்க்கை முறையை படம்பிடித்துக் காட்டி அதிர்வலையை ஏற்படுத்தியது. சுருட்டு பிடித்தபடி வலம் வந்து மனித மண்டை ஓடுகளோடு குடும்பம் நடத்தும் அகோரிகளுக்கு சடலங்களை திண்ணும் மறுபக்கம் உண்டு என்பதை ஜீரணிக்க தமிழ் ரசிகர்களுக்கு சற்றே சிரமப்பட்டனர்.

இந்த பின்னணியில்தான் தமிழ்நாட்டிலும் தமிழ் பேசும் அகோரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர்தான் திருச்சி காவிரிக்கரையில் அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வரும் மணிகண்டன். உடல் முழுவதும் திருநீறு பூசி வலம் வரும் மணிகண்டனுக்கு வெகு விரைவிலேயே சீடர்களும் பெருகினர். அவர்களும் மணிகண்டனைப் பின்பற்றி பூஜைகள் செய்து வருகின்றனர்,

காசியில் மட்டுமே வாழ்ந்து அருள்புரியும் அகோரிகள் தமிழகத்திலும் இருக்க வேண்டும் என்பதால்தான் சொந்த ஊருக்கு தான் வந்ததாகக் கூறிய அகோரி மணிகண்டன், தாங்கள் உயிரிழந்த சடலங்களை உண்பவர்கள் என பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார், இதுபோதாதென அவரது தாய் மறைந்தபோதும், பின்னர் அவரது சீடர் அண்மையில் உயிரிழந்தபோதும் அவர்களின் உடல்கள் மீது அமர்ந்து ஆத்ம சாந்தி பூஜை செய்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார் அகோரி மணிகண்டன்,

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற அகோரி மணிகண்டனின் திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தன்னிடம் கடந்த எட்டு ஆண்டுகளாக அகோரி பயிற்சி பெற்று வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற அகோரி சிஷ்யையை கரம் பிடித்து லௌகீக வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். திருமணத்தின்போது அகோரி மணிகண்டன் தன் உடல் முழுவதும் திருநீறு பூசி அகோரி கோலத்தில் இருந்த பிரியங்காவை கரம் பிடித்தார்.



அப்போது நடைபெற்ற சிறப்பு யாகத்தின் போது சக அகோரிகள் தமரா மேளம் அடித்தும், சங்கொலி எழுப்பி ஹர ஹர மகாதேவா என முழங்கினார். அகோரி மணிகண்டனின் திருமணத்தை குருவான சித்தர் மதுரைபால்சாமி நடத்தி வைத்தார். திருமணம் முடிந்த பிறகு மீண்டும் யாகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. திருச்சியில் நடந்த இந்த அபூர்வ அகோரித் திருமணம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

செய்தியாளர் : கதிரவன், திருச்சி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: