ஊரடங்கை மீறி திமுகவினர் வெற்றிக்கொண்டாட்டம் - போலீசிடம் சொன்ன அதிமுக பிரமுகருக்கு அடி உதை

ஊரடங்கை மீறி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறி அதிமுக பிரமுகர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக  8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

ஊரடங்கை மீறி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறி அதிமுக பிரமுகர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக  8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

 • Share this:
  ஊரடங்கை மீறி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறி அதிமுக பிரமுகர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக  8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  கொரோனா பரவல் காரணமாக தமிழத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் வெற்றியை கொண்டாடவும் தேர்தல் ஆணையம்  தடை விதித்திருந்தது.

  இந்நிலையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்  தொகுதிக்குட்பட்ட இனாம்குளத்தூர் அருகேயுள்ள பெரிய ஆலம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகி சார்லஸ் என்பவர், தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து தனது  நண்பர்கள் பாக்கியராஜ், பொன்னர், ரகுபதி, பொன் சரவணன், இளையராஜா, சுப்பிரமணி ஆகியோருடன் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார்.

  தகவல் அறிந்த இனாம்குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சார்லஸ் உள்ளிட்டோரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த அதிமுக கிளை செயலாளரான பச்சை முத்துவிடம், சார்லஸின் நண்பரான இளையராஜா என்பவர்  ‘நீதான் போலீசை வர சொல்லி எங்கள் மீது புகார் கொடுத்துள்ளாய்’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  இளையராஜா  அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பச்சமுத்துவை அடித்து உதைத்துள்ளனர். இதில் காயமடைந்த பச்சைமுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்த சம்பவம் தொடர்பாக இனாம்குளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில்,திமுக நிர்வாகிகள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: