திருச்சியில் சானிடைசர் ஊற்றி அடுப்பு பற்ற சிறுவன்: பாட்டில் வெடித்து உயிரிழந்த பரிதாபம்

Youtube Video

திருச்சி அருகே சானிடைசரை ஊற்றி அடுப்பை பற்ற வைத்தபோது சானிடைசர் பாட்டில் வெடித்து தீ பற்றியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

 • Share this:
  திருச்சி அடுத்த விரகுபேட்டை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் ஸ்ரீசாம் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் அவர் வீட்டில் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் அவர் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே கூட்டாஞ்சோறு சமைக்க முடிவு செய்துள்ளார். அப்போது சிறுவர்கள் சிலர் செங்கற்கள் மூலம் அடுப்பை தயார் செய்துள்ளனர்.

  பின்னர் அடுப்பை பற்ற வைக்க சிறுவன் ஸ்ரீசாம் தனது வீட்டில் இருந்த சானிடைசர் பாட்டிலை எடுத்து வந்துள்ளார். அப்போது சானிடைசரை அடுப்பில் ஊற்றி தீ பற்ற வைத்தபோது, சிறுவன் கையில் இருந்த சானிடைசர் பாட்டில் மீது தீப்பொறி பட்டு வெடித்துள்ளது. இதில் சிறுவன் ஸ்ரீசாம் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், சிறுவனை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஸ்ரீசாம் உயிரிழந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், சானிடைசர் பாட்டிலை குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
  Published by:Karthick S
  First published: