முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மணப்பாறையில் தனியார் தோட்டத்தில் 9 மயில்கள் உயிரிழப்பு... வனத்துறையினர் விசாரணை

மணப்பாறையில் தனியார் தோட்டத்தில் 9 மயில்கள் உயிரிழப்பு... வனத்துறையினர் விசாரணை

மணப்பாறைக்குன்விரைந்த வனத்துறையினர்

மணப்பாறைக்குன்விரைந்த வனத்துறையினர்

மணப்பாறை அருகே தனியார் தோட்டத்தில் 9 மயில்கள் நேற்று இறந்து கிடந்துள்ளது. இது  தொடர்பாக வனத்துறையினர் விசாரணைசெய்து வருகின்றனர். 

  • Last Updated :

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வடுகபட்டி பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் 9 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த 9 மயில்களையும் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அதன் பின்னர் கால்நடை மருத்துவர் 9 மயில்களையும் பிரேத பரிசோதனை செய்தார். அந்த பிரேத பரிசோதனை முடிவில் தான் மயில்கள் எப்படி இறந்தது என்பது தெரியவரும். இருப்பினும் ஒரே இடத்தில் மயில்கள் இறந்து கிடந்ததால் அவை விஷம் வைத்து கொள்ளப்பட்டதா என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க... சேலம் : இறைச்சி கடைகளை உடனடியாக மூடச் சொன்னதால் அதிகாரிகள், வியபாரிகள் வாக்குவாதம்

மணப்பாறை பகுதியில் சமீபகாலமாகவே தேசிய பறவையான மயில்கள் கொத்து கொத்தாக இறந்து கிடக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களையும் பொதுமக்களையும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. மயில்களின் உயிரிழப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: ராமன்

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Forest Department, Manaparai