திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறிமுதல்; 6 பயணிகளிடம் விசாரணை!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறிமுதல்; 6 பயணிகளிடம் விசாரணை!

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சார்ஜா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த நான்கு சிறப்பு மீட்பு விமானங்களின் மூலம் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

 • Share this:
  திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது, இந்த சிறப்பு விமானங்களில் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.

  அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் 11.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது, இதுதொடர்பாக விமான நிலைய சுங்கத்துறை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சார்ஜா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இன்றும், நேற்றும் வந்த நான்கு சிறப்பு மீட்பு விமானங்களின் மூலம் பயணிகள் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் வந்தனர்.

  இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது, இதனையடுத்து விமானங்களில் வந்த பயணிகளை சோதனையிட்டபோது, அவர்களில் 6 பயணிகள் தங்களது உடமைகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

  Also read: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலின் பேரில் தமுமுக நடத்தி வந்த மருத்துவமனை இடிப்பு: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

  அவர்களிடமிருந்து சுமார் 3 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர் - கதிரவன்
  Published by:Esakki Raja
  First published: