• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 37 அடி உயரத்தில் ஸ்ரீரங்கம் அருகே அமைய உள்ள பிரம்மாண்ட அனுமன் சிலை...

37 அடி உயரத்தில் ஸ்ரீரங்கம் அருகே அமைய உள்ள பிரம்மாண்ட அனுமன் சிலை...

37 அடி உயரத்தில் ஸ்ரீரங்கம் அருகே அமைய உள்ள பிரம்மாண்ட அனுமன் சிலை...

37 அடி உயரத்தில் ஸ்ரீரங்கம் அருகே அமைய உள்ள பிரம்மாண்ட அனுமன் சிலை...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் மிக உயரமான, பிரம்மாண்ட அனுமன் சிலை அமைக்கப்படவுள்ளது.

  • Share this:
நாமக்கல் ஆஞ்நேயர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. நாமக்கல்,  சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்கள் வரிசையில் அவற்றை விட உயரமான ஆஞ்சநேயர் சிலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மேலூர் அனுமன் தோப்பில் அமைய உள்ளது. பிரம்மாண்ட சிலையை குறுகலான சாலைகளில் கொண்டு வந்து, நிலை நிறுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி வாசுதேவன் முயற்சியில் வரும் 24ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலூர் அனுமன் தோப்பு பகுதியில் அமையும் ஸ்ரீ சஞ்ஜீவன ஆஞ்சநேயர்  கோயிலில் 37 அடி சிலை  பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதே வளாகத்தில் தாயார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட உப சன்னதிகளும் அமைய உள்ளன.



அனுமார் பக்தரான வாசுதேவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கின்னஸ் சாதனை முயற்சியாக தொடர்ந்து 41 நாட்களுக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுத தொடங்கினார். எழுத தொடங்கிய 21ம் நாளில் ஸ்ரீ அனுமன் கனவில் தோன்றியுள்ளார். அப்போது முதல், அனுமன் உபாசகராக மாறி, தேடி வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீ சஞ்ஜீவன ஆஞ்சநேயர் அறக்கட்டளையைத் தொடங்கி, இதற்காக ஸ்ரீரங்கம் அருகே மேலூர் கிராமத்தில் தற்போதுள்ள அனுமன் தோப்புக்கான நிலத்தை வாங்கியுள்ளார். இங்குதான், பிரம்மாண்ட, மிக உயரமான ஸ்ரீ சஞ்ஜீவன ஆஞ்சநேயர் சிலை அமைகிறது. சுமார் 250 டன் பாறையில் இருந்து இந்த சிலையை 108 டன் எடையில்  37 அடி உயரத்தில்  வடிவமைத்துள்ளனர். இருபதிற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இப்பணியை செய்துள்ளானர்.



அடித்தளம் சுமார் 5 அடி உட்பட மொத்தம் 42 அடி உயரத்தில் விஸ்ரூப ஆஞ்சநேயர் சிலை அமைகிறது. வரும் 24ம் தேதி விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதே வளாகத்தில் பிற சன்னதிகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று, வரும் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள இக் கோயில் வளாகத்தில் பசுக்களை பராமரிக்கும் கோ சாலை, வேத பாட சாலைகளும் இயங்கி வருகின்றன. கோயில் குறித்த விபரங்களுக்கு 0431 -2435165, 9443835725 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: