• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சியில் அசாத்திய திறமையால் சாதனை படைத்த 22 மாதக் குழந்தை

திருச்சியில் அசாத்திய திறமையால் சாதனை படைத்த 22 மாதக் குழந்தை

Youtube Video

திருச்சியில் 22 மாதங்களே ஆன குழந்தை தனது அசாத்திய திறமையால், சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

  • Share this:
    திருச்சியைச் சேர்ந்த கிரிதர் பிரசாத், பவித்ரா தம்பதியின் மகன் சாய்தருண். 22 மாதக் குழந்தையான சாய்தருண், பல்வேறு பொருட்களின் பெயர்களை சரியாக சொல்லி பலரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.

    சுதந்திர போராட்ட வீரர்கள், உணவுப்பொருட்கள், வண்ணங்கள், ஆடைகள், உடல் பாகங்கள், பழங்கள், காய்கறிகள் என எந்த பொருட்களை கலைத்து போட்டாலும், வெறும் 30 வினாடிகளில் அதை எடுத்து Puzzle அட்டையில் சரியாக அடுக்கி வைத்து விடுகிறார் சாய் தருண்.

    பொதுஅறிவு கேள்விகளுக்கும் மழலை குரலில் வேகமாக பதில் கூறி அசத்துகிறார். 10 மாதத்திலேயே குழந்தையிடமிருந்த திறமையை கண்டறிந்ததாக கூறும் பெற்றோர், அதனை ஊக்கப்படுத்தும் விதமாக நாள்தோறும் பயிற்சி அளித்ததாக கூறுகின்றனர்.

    குழந்தையின் அசாத்திய திறமையை கவுரவிக்கும் விதமாக இந்தியா புக் ஆப் ரெக்கார்டு பதக்கம் வழங்கி பாராட்டியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: