கொரோனாவால் இறந்த தாய்: துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை - திருச்சி விமான நிலையத்தில் நெகிழ்ச்சி!

துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை

குடும்ப வறுமையைப் போக்கவீட்டு வேலை செய்வதற்காக பாரதி தனது 9-மாத குழந்தை தேவேஷ் உடன் கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு சென்றார்.

  • Share this:
கள்ளக்குறிச்சி மாவட்டம்  சித்தேரி தெருவைச் சேர்ந்த வேலவன் மனைவி பாரதி (38). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள். மூத்த மகன் சிறுநீரக கோளாறால் இறந்து விட்டார். குடும்ப வறுமையைப் போக்கவீட்டு வேலை செய்வதற்காக பாரதி தனது 9-மாத குழந்தை தேவேஷ் உடன் கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு சென்றார்.
துபாயில் கொரானா தொற்று காரணமாக கடந்த 29ம்  தேதி பாரதி இறந்து விட்டார். அவரின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

Also Read:    ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ராயல் என்ஃபீல்டு-ன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம் ?

தாய் இறந்த நிலையில் குழந்தை மட்டும் தனியே இருக்கும் தகவல் அறிந்த துபாய் திமுக அமைப்பாளர்  எஸ்.எஸ்.முகமது மீரான் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத்  தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து முதலமைச்சர்  உதவியுடன் துபாயிலிருந்து குழந்தையை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில்  திருவாரூரை சேர்ந்த சதீஷ்குமார் துபாயில் இருந்து ஊர் திரும்புவதை அறிந்து இண்டிகோ விமானத்தில் அவருடன் 11-மாத கை குழந்தை தேவேஷை திருச்சிக்கு  அனுப்பி வைத்தனர். அவரும் குழந்தை தேவேஷை பாதுகாப்பாக அழைத்து வந்து,  குழந்தையின் தந்தை வேலவனிடம் திருச்சி விமான நிலையத்திலேயே ஒப்படைத்தார். கொரோனாவால் தாயை இழந்த குழந்தை தந்தை அண்ணனுடன் சேர்ந்த நிகழ்வு பலரையும் நெகிழச் செய்தது.

 
Published by:Arun
First published: