ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருச்சி சிவா மகன் சூர்யாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது - நித்யானாந்தா அறிவிப்பு

திருச்சி சிவா மகன் சூர்யாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது - நித்யானாந்தா அறிவிப்பு

நித்தியானந்தா, திருச்சி சூர்யா

நித்தியானந்தா, திருச்சி சூர்யா

அதில் கைலாசா தர்மரக்சகா விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டிருந்த அவர், நித்தியானந்தாவிற்கு நன்றி தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யாவிற்கு ‘கைலாசா தர்மரக்சகா விருது’ வழங்கி நித்தியானந்தா கவுரவித்துள்ளார். 

  திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் மக்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா, சில மாதங்கள் முன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் தமிழ்நாடு பாஜகவின் பிற்படுத்தப்பட்ட பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

  இந்நிலையில் விஜயதசமி அன்று நித்தியானந்தா ஆசிரமம் நடத்திய கைலாசா ஓம் விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் சமூகவலைதளத்தில் தொடர்ந்து ஹிந்து மதத்திற்கு ஆதரவாக பேசி வரும் இளம் தலைவர் என புகழாரம் சூட்டி அவருக்கு ‘கைலாசா தர்மரக்சகா விருது’ வழங்கப்பட்டது.

  இதனை தொடர்ந்து, அதில் பேசிய திருச்சி சூர்யா, நித்தியானந்தா சுவாமிகளின் அருளால்தான், தற்போது பாஜகவில் பணியாற்றும் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும் வீடியோ கால் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் குறும் தொகுப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

  இதையும் வாசிக்க: ஸ்டாலின் மிகவும் நல்லவர் தான்... அவருடன் இருப்பவர்கள்தான் தூண்டி விடுகின்றனர்- ஹெச்.ராஜா

  அதில் கைலாசா தர்மரக்சகா விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டிருந்த அவர், நித்தியானந்தாவிற்கு நன்றி தெரிவித்தார்.

  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: BJP, Nithyanandha, Tiruchi Siva