நட்சத்திர ஹோட்டலில் மட்டுமே திருடும் டிப் டாப் கொள்ளையன்!

நல்ல தோற்றத்துடன் ஆடை அணிந்து வரும் கொள்ளையன், தெளிவான ஆங்கிலத்தில் பேசி ஏமாற்றி, திறமையாக கொள்ளையடிப்பது வழக்கம்

நல்ல தோற்றத்துடன் ஆடை அணிந்து வரும் கொள்ளையன், தெளிவான ஆங்கிலத்தில் பேசி ஏமாற்றி, திறமையாக கொள்ளையடிப்பது வழக்கம்

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நட்சத்திர ஹோட்டல் அறைகளில் திருடும் சர்வதேச டிப் டாப் கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஜுன் 7-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், கனடா நாட்டு தம்பதியர் தங்கியிருந்த அறையில், 4.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கனடா நாட்டு டாலர் கொள்ளையடிக்கபட்டது.

இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கனடா நாட்டு தம்பதியர் தங்கியிருந்த அறையை, டிப் டாப் நபர் நோட்டமிட்டதாகவும், அவரிடம் ஹோட்டல் ஊழியர் கேட்டபோது அந்த அறையில் தான் தங்கியிருப்பதாகவும், அறையை திறக்கப் பயன்படும் நுழைவு அட்டை வேலை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய ஓட்டல் ஊழியர் தான் வைத்திருந்த மாற்று நுழைவு அட்டையை பயன்படுத்தி, அறையை திறக்க உதவி செய்துள்ளார். அதன் பின் அறையில் உள்ளே சென்ற கொள்ளையன், லாக்கரில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார்.

லாக்கரை திறக்க முடியாத காரணத்தால் மீண்டும் ஓட்டல் ஊழியர்களிடம் லாக்கரைத் திறக்க முடியவில்லை என ஏமாற்றி, மற்றொரு சாவியின் மூலம் லாக்கரை திறந்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்த டிப் டாப் கொள்ளையன், இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் திருடுவது வழக்கம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது

நல்ல தோற்றத்துடன் ஆடை அணிந்து வரும் கொள்ளையன், தெளிவான ஆங்கிலத்தில் பேசி ஏமாற்றி, திறமையாக கொள்ளையடிப்பது வழக்கம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை, பெங்களூர், ஹைதாரபாத், கேரளா, டெல்லி, மும்பை என பல மாநிலங்களில் உள்ள நடத்திர ஹோட்டல்களில் திருடிய வழக்கு இவர் மீது இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் பிற நாடுகளிலும் இது மாதிரியான கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தலைமறைவாக உள்ள இந்த பலே டிப் டாப் கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.

Also watch: ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை… சேலத்தில் அமைக்கும் பணிகள் தீவிரம்!

Published by:Anand Kumar
First published: