முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''உங்கள் தந்தையின் கனவு.. தேசிய அரசியலுக்கு வாங்க ஸ்டாலின்..'' பிறந்தநாள் விழா மேடையில் அழைப்பு விடுத்த பரூக் அப்துல்லா!

''உங்கள் தந்தையின் கனவு.. தேசிய அரசியலுக்கு வாங்க ஸ்டாலின்..'' பிறந்தநாள் விழா மேடையில் அழைப்பு விடுத்த பரூக் அப்துல்லா!

பரூக் அப்துல்லா, முதலமைச்சர் ஸ்டாலின்

பரூக் அப்துல்லா, முதலமைச்சர் ஸ்டாலின்

 ஸ்டாலின் அவர்களே நீங்கள் தேசிய அரசியலுக்கு வாருங்கள். உங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை தேசிய அளவில் காட்டுங்கள். - பரூக் அப்துல்லா

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் பேசிய காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, “மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே உழைத்து வருகிறீர்கள். ஒரு சிறந்த தலைவரின் மகன் நீங்கள். உங்கள் தந்தையை நான் நன்கு அறிவேன்.

உங்கள் தந்தையும், என் தந்தையும், ஒரு சிறந்த இந்தியாவை கட்டமைக்க பாடுபட்டனர். இந்தியாவில் மக்கள் பசியில் உள்ளனர். வேலை வாய்ப்பு இல்லை. அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றனைய வேண்டும். ஸ்டாலின் அவர்களே நீங்கள் தேசிய அரசியலுக்கு வாருங்கள். உங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை தேசிய அளவில் காட்டுங்கள்.

யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாக மாற்றுவார்கள், ஆனால் காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளனர். நாடு தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலை பிரதமர் வேட்பாளர் யார் என்பது பிரச்சினை இல்லை. நாம் அனைவரும் முதலில் ஒன்றிணைைய வேண்டும். உங்கள் தந்தையின் கனவு, என் தந்தையின் கனவு, என்னுடைய கனவு, உங்களுடைய கனவு எல்லாமே அமைதியான இந்தியா தான். அதற்கு நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள ஒற்றுமை, எப்போதுமே அமைதியை விரும்பவது தான்” என தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Farooq Abdullah