‘அரசு சார்பில் வீடு வேண்டும்' முதலமைச்சருக்கு டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கோரிக்கை

ரவுடி பேபி சூர்யா

தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 • Share this:
   தமிழக அரசு சார்பில் வீடு கட்டித்தர வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கோரிக்கை வைத்துள்ளார்.

  திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரிநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக் செயலியில் சூர்யா என்ற பெயரில் செய்த சேட்டைகள் காரணமாக ரவுடி  பேபி சூர்யா என அழைக்கப்பட்டார். பின்னர் இதையே தனது பெயராகவும் மாற்றிக் கொண்டு சமூக வலைதளங்களில் வலம் வந்தார்.

  இவர் தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகவும், அதற்காக ஆன்லைனில் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக ரவுடி பேபி சூர்யா இன்று நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  மேலும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசு சார்பில் வீடு கட்டித்தர வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: