முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 2021ம் ஆண்டில் கூகுளை மிஞ்சிய டிக்-டாக் இணையதளம் - எப்படி இது சாத்தியமாகியது?

2021ம் ஆண்டில் கூகுளை மிஞ்சிய டிக்-டாக் இணையதளம் - எப்படி இது சாத்தியமாகியது?

கடந்த 2020 ஆம் ஆண்டில் கூகுள் தளம் தான் டாப் வரிசையில் முதலில் இருந்தது. இதற்கு அடுத்தாக ஃபேஸ்புக் இருந்தது. இந்த வரிசையில் கடந்த ஆண்டு டிக்-டாக் தளம் 7 ஆவது இடத்தில் இருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் கூகுள் தளம் தான் டாப் வரிசையில் முதலில் இருந்தது. இதற்கு அடுத்தாக ஃபேஸ்புக் இருந்தது. இந்த வரிசையில் கடந்த ஆண்டு டிக்-டாக் தளம் 7 ஆவது இடத்தில் இருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் கூகுள் தளம் தான் டாப் வரிசையில் முதலில் இருந்தது. இதற்கு அடுத்தாக ஃபேஸ்புக் இருந்தது. இந்த வரிசையில் கடந்த ஆண்டு டிக்-டாக் தளம் 7 ஆவது இடத்தில் இருந்தது.

  • Last Updated :

    ஒவ்வொரு ஆண்டிலும் சில முக்கியமான தரவுகளை அந்தந்த சேவை நிறுவனங்கள் வெளியிடுவது வழக்கம். குறிப்பாக ஆண்டின் இறுதியில் அந்தந்த தளங்களில் எந்த வகையான தகவல்கள் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது, அதிக அளவில் பகிரப்பட்ட தரவுகள் போன்றவற்றை நிறுவனங்களின் சார்பில் வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த ஆண்டில் டாப் 10 இணைய தளங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

    நமக்கு தேவையான பல தகவல்களை அதிக அளவில் வழங்குபவை இணைய தளங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட இணைய தளங்கள் தான் டாப் வரிசையில் இருந்துள்ளது. இந்த ஆண்டு இது வரை இல்லாத வகையில் வேறொரு தளம் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் கூகுள் தளம் தான் டாப் வரிசையில் முதலில் இருந்தது. இதற்கு அடுத்தாக ஃபேஸ்புக் இருந்தது. இந்த வரிசையில் கடந்த ஆண்டு டிக்-டாக் தளம் 7 ஆவது இடத்தில் இருந்தது.

    ஆனால், தற்போது 2021 ஆம் ஆண்டில் முதல் இடத்தை டிக்-டாக் தளம் பிடித்துள்ளது. பல்வேறு வகையான ஷார்ட் வீடியோக்களை கொண்ட தளமாக டிக்-டாக் திகழ்கிறது. உலக அளவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் டிக் டாக்கை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதியில், டிக்-டாக் டாப் வரிசையில் முதல் இடத்தை பிடித்தது. மீண்டும் மார்ச் மற்றும் மே மாதங்களில் சில தினங்களிலும் முதல் இடத்தை பிடித்திருந்தது.

    அடுத்தாக ஆகஸ்ட் 10 ஆம் தேதியில் இருந்து பல நாட்கள் முதல் இடத்திலேயே இருந்து வந்தது. சில தினங்கள் கூகுள் நம்பர் 1 இடத்தில் இருந்தாலும், டிக்-டாக் தளம் அக்டோபர் மற்றும் நவம்பரில் முதல் இடத்தில் இருந்து வந்தது. எனவே இந்த ஆண்டின் முழு தரவுகளை வைத்து பார்க்கும் போது கூகுளை டிக்-டாக் தளம் முந்தி உள்ளது உறுதியாகிவிட்டது.

    Also read... MS Word டாக்குமென்ட்டில் எக்ஸ்ட்ரா அல்லது பிளாங்க் பேஜை டெலிட் செய்வது எப்படி!

    அதன்படி இந்த 2021 ஆம் ஆண்டில் டாப் 10 தளங்களில் டிக்-டாக் முதல் இடத்தை பிடித்துள்ளது. அடுத்தாக கூகுள் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஃபேஸ்புக் தளம் மூன்றாவது இடத்தையும், மைக்ரோசாஃப்ட் நான்காவது இடத்தையும், ஆப்பிள் தளம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. உலகில் பல்வேறு பொருட்களை ஆன்லைனில் வாங்குவதற்கு மக்கள் பயன்படுத்தும் அமேசான் தளம் இந்த வரிசையில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு அதிரடி தள்ளுபடியை அறிவித்த நெட்பிளிக்ஸ் தளம் 7 ஆவது இடத்தில் உள்ளது.

    Also read... புகைப்படங்களை மொபைலில் இருந்து உங்களின் லேப்டாப்பிற்கு எளிதாக பகிர்ந்து கொள்வதற்கான வழிகள்

    பல வகையான வீடியோக்களை கொண்ட யூடியூப் தளம் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக 9 ஆவது இடத்தை ட்விட்டர் தளமும், 10 ஆவது இடத்தை பிரபலமான வாட்ஸ்ஆப் தளமும் பிடித்துள்ளது. இந்த டாப் 10 வரிசையில் உள்ள எல்லா நிறுவனங்களும் மிக பெரிய ஜாம்பவான்கள் தான். இருப்பினும் இவை அனைத்தையும் மிக சிறந்த முறையில் டிக்-டாக் தளம் வென்றது தான் பலருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்து வருகிறது.

    top videos

      இந்தியாவில் டிக்-டாக்கை தடை செய்தாலும் அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில், தென் ஆசியா போன்ற மற்ற நாடுகளில் ஷார்ட் வீடியோ ஆப்களுக்கு மிக பெரிய சந்தை உள்ளது என்பதை இந்த தரவுகள் மூலம் தெரிகிறது.

      First published: