டிக்டாக் பிரபலம் ஜிபி.முத்து தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? - ’விபரீத முடிவு வேண்டாம் அண்ணா..’ என அன்பு கட்டளையிடும் ரசிகர்கள்..

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவின் தற்கொலை முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பல காரணங்கள் சொல்லிவந்த நிலையில், உண்மை என்ன என விளக்கியுள்ளார். இந்த விபரீத முடிவுக்கு நியூஸ் 18 செய்தியாளரிடம் அவர் கூறிய காரணம் என்ன?

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.டிக் டாக்கில் அதிக அளவு ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். நாள்தோறும் இவர் வெளியிடும் வீடியோக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து இழுக்க காரணம் தென் மாவட்டத்திற்கு உரித்தான எதார்த்தமான தமிழ் பேச்சுதான்.

தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர்.

டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தான் மிகுந்த மன வேதனையோடு இருப்பதாகவும, ரசிகர்கள் வீடியோ பதிவிட சொல்கின்றனர். என்னால் வீடியோ பதிவு செய்ய முடியவில்லை என்று ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார். தொடரந்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.


மேலும் படிக்க... Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 15, 2020)

இதையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இரண்டு தினங்கள் சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பியுள்ளார். ஜிபி.முத்து தற்கொலை முயற்சிக்கு காரணம் வயிற்று வலியா, டிக் டாக் தடை செய்யப்பட்டதா, வீடியோ பதிவிடாமல் போனதா என்று அவரது ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய குழப்பம் நிலவி வந்தது. அவரது ரசிகர்கள் சமூக வலைதளம் மூலமும், நேரிலும் இனி இப்படி ஒரு முடிவு எடுக்காதீர்கள் என கேட்டுக்கொண்டு வருகின்றனர் .பெங்களூருவில் இருந்து வந்த ஒரு இளம் ரசிகர், பழங்கள் வாங்கிச்சென்று கொடுத்து ஆறுதல் கூறி கண்டிப்பாக தொடர்ந்து வீடியோ பதிவிட வேண்டும் எனக்கூறினார். ரசிகரின் அன்பு கட்டளையால் அடுத்த வினாடியே அவருடன் இணைந்து பழைய உற்சாகத்தில் வீடியோ பதிவிட்டார் ஜி.பி.முத்து.

திடீர் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் எனக்கேட்டபோது, கொரோனா காரணமாக தொழில் பாதிப்பு, தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் உள்ளிட்ட காரணத்தால் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். எது எப்படி இருந்தாலும் 4 குழந்தைகளுக்கு தந்தையான ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி எடுத்ததை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ரசிகர்கள், இதே போன்ற தவறை மீண்டும் ஒரு முறை செய்யக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. மீண்டும் பழைய ஜி.பி.முத்துவாக வீடியோ வெளியிட்டு கொரோனாவால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளவர்களை மகிழ்விப்பாரா?


-----------------------------------------------------------------------------------------------மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050டிக்டாக் பிரபலம் ஜிபி.முத்து தற்கொலைக்கு முயற்சிக்கு காரணம் என்ன? - இது போன்று விபரீத முடிவு எடுக்காதீர்கள் அண்ணா என்று அன்பு கட்டளையிடும் டிக்டாக் ரசிகர்கள்..

First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading