Home /News /tamil-nadu /

ஆபாசப்பேச்சு.. வீடியோ.. சிறைப்பறவைகளாக ரவுடி பேபி சூர்யா - சிக்கா

ஆபாசப்பேச்சு.. வீடியோ.. சிறைப்பறவைகளாக ரவுடி பேபி சூர்யா - சிக்கா

சூர்யா - சிக்கந்தர்ஷா

சூர்யா - சிக்கந்தர்ஷா

ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கத்தர்ஷா ஆகியோரை கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

  டிக் டாக்கில் ரவுடி பேபி என்ற அடைமொழியுடன் வலம் வந்த சூர்யாவை ஆபாசமாக பேசிய வழக்கில் கோவை போலீஸார் கைது செய்தனர். பொழுதுபோக்கு செயலியாக அறிமுகமான டிக்டாக் பலருக்கும் பிழைப்பாகவே மாறிப்போனது. நேரம் காலம் தெரியாமல் டிக் டாக்கில் பொழுதை கழித்தவர்கள் ஏராளம். சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் வசனங்களை சுருளி ராஜன் பேசினால் எப்படி இருக்குமோ அப்படியான கண்டெண்ட்கள் ஏராளமாக காண கிடைக்கும். இதில் சில பெண்கள் சில்க் ஸ்மிதா அவதாரம் எடுத்து கவர்ச்சிகளை அள்ளி வீசிய கொடுமைகள் எல்லாம் அரங்கேறியது.

  டிக் டாக் செயலி தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதன்மூலம் கொஞ்சம் வெளியுலக வெளிச்சத்துக்கு வந்த சிலர் யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என சோஷீயல் மீடியாக்களில் சோக்காக இப்போதும் வலம் வருகின்றனர். அதில் ஒருவர் தான் இந்த ரவுடி பேபி சூர்யா. பெயரில் பேபி இருந்தாலும் அம்மணிக்கு அத்தை வயதாம். டிக் டாக்கில் திரைஇசை பாடல்களுக்கு நடனமாடியும், ரியாக்‌ஷன்களாலும் லைக்ஸ் அள்ளிய சூர்யா போகப்போக கொஞ்சம் கவர்ச்சியை காட்டி ஃபாலோயர்களை அள்ளினார்.

  Also Read:  டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா YouTube சேனல்கள் முடக்க நடவடிக்கை - கோவை மாவட்ட போலீஸார் தகவல்

  கவர்ச்சி எல்லை மீறியதும் கமெண்ட்கள் எடாகூடமாக வரத் தொடங்கியது. ஆரம்பத்தில் கலக்கல் ராணியாக இருந்த சூர்யா அதன்பின் சொர்ணா அக்கா அவதாரம் எடுத்தார். டேய்.. வாடா போடா என வீடியோக்களில் வார்த்தைகளை வீசத் தொடங்கினார். தன் சொந்தப் பிரச்னைகளையும் வீடியோக்கள் மூலம் கொட்டத் தொடங்கினார். ரவுடி பேபி சூர்யாவுடன் ஆரம்பத்தில் டூயட் பாடிய டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து இடையே முட்டல் மோதல்கள்  வெடிக்கத் தொடங்கியது. இதில் கடுப்பான ஜி.பி. முத்து ரவுடி பேபியை கழற்றி விட்டு சென்றார்.

  சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் நாள்களை நகர்த்தி வந்தார் சூர்யா. தூக்கு மாட்டி தற்கொலை முயற்சி, சிங்கப்பூர் சிக்கல், டிக் டாக் இலக்கியாவுடன் மோதல் என சோஷியல் மீடியாக்களில் உலாவும் நெட்டிசன்களுக்கு கண்டெண்டாக மாறினார். இறுதியில் வந்து ரவுடி பேபி சூர்யாவுடன் இணைந்தவர் தான் சிக்கந்தர்ஷா எனும் சிக்கா.

  Also Read: வீடு புகுந்து பெண் போலீஸை பலாத்காரம் செய்ய முயன்ற ஏட்டு..

  சிக்காவும் ரவுடி பேபி அக்காவும் மீண்டும் டூயட் பாடினார்கள். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக குடும்பம் இருப்பது வேறு கதை. சிக்காவுடன் அடிக்கடி தகராறு வரும். இருவரும் வீடியோக்களை போட்டு ஆபாசமாக திட்டுக்கொள்வார்கள். அவன் குடும்பத்தை நான் கேவலமா பேசுவேன் என் குடும்பத்தை அவன் ரொம்ப கேவலமா பேசுவான் இது எங்களுக்குள்ள ஒரு டைம்பாஸ் என வடிவேலு காமெடியில் இடம்பெறும் வசனம் போல் இருவரும் வீடியோக்களில் முட்டி மோதிக்கொள்வார்கள். அதன்பின் மீண்டும் இணைந்துக்கொள்வார்கள். இவர்களின் ஆபாச பேச்சுகளும் எல்லை மீறிப்போனது.

  இந்நிலையில் தான் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த யூடியூபர் தம்பதியை இழிவாக பேசியும், அவர்களின் தொலைபேசி எண்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன் ரவுடிபேபி சூர்யா மிரட்டல் விடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் வைத்து ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கத்தர்ஷா ஆகியோரை கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

  சமூக வலைதளங்களில் சமூகத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை சூர்யாவும், சிக்கந்தர்ஷாவும் யூடியூப்பில் பதிவு செய்து வருவதாகவும், இதுசமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பதால் இவர்கள் இருவரும் நடத்தி வரும் surya media மற்றும் singer sikka official ஆகிய யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியான நடவடிக்கையை கோவை போலீஸார் எடுத்து வருகின்றனர்
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Instagram, TikTok, Videos, Youtube

  அடுத்த செய்தி