• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Tik Tok -ல் வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபச்சார வலைவீச்சு - பாலியல் புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்

Tik Tok -ல் வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபச்சார வலைவீச்சு - பாலியல் புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்

டிக் டாக்

டிக் டாக்

சிலர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், அரைகுறை ஆடைகளோடு, ஆபாசமாக நடனமாடி பதிவு செய்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    எந்தவித கட்டுப்பாடுமின்றி ஆபாச வீடியோக்கள், டிக்டாக், போன்ற செயலிகளில் வலம் வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இதன் பின்னணியில் விபச்சார தொழில் மறைந்து கிடப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

    பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த முக்கிய நபர்களில் ஒருவரான பூங்கா வெங்கடேசனை, அண்மையில் விபச்சார தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

    ஐ.டி.நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதியில் சட்டவிரோதமாக மசாஜ் பார்லர் நடத்தி, அதன்மூலம் பாலியல் தொழிலை படுஜோராக நடத்தி வந்துள்ளார் பூங்கா வெங்கடேசன். ஆனால், தினம்தினம் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப, பாலியல் தொழிலை விரிவுப்படுத்த நவீன முறையை புகுத்தியுள்ளார். இதற்காக இவர் தேர்வு செய்ததுதான் டிக்டாக் ஆப்.

    இந்த வகை செயலிகளில், சினிமா பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப வாயசைத்து, பலர் வீடியோக்கள் பதிவு செய்கின்றனர். குறிப்பாக சிலர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், அரைகுறை ஆடைகளோடு, ஆபாசமாக நடனமாடி பதிவு செய்கின்றனர்.

    இதுபோன்ற வீடியோக்களில் அதிக லைக்ஸ் பெறுபவர்களை குறிவைக்கும் பாலியல் கும்பல், அவர்களிடம் Chat மூலம் நட்பாக பேசி பழகி, அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் வலைக்குள் விழ வைக்கின்றனர்.

    இன்னும் சில தரகர்கள், தங்களிடம் உள்ள பெண்களை ஆபாசமாக பாடவும், ஆடவும் செய்து, அதனை டிக்டாக் செயலியில் பதிவிட்டு, அதற்கு ஆபாசமாக கமெண்ட் போடும் நபர்களிடம் பேரம் பேசி பாலியல் தொழிலை நடத்தி வந்ததாக பூங்கா வெங்கடேசன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்

    டிக்டாக், போன்ற செயலிகளில் ஆபாச வீடியோக்களை பதிவிடுவதை தவிர்க்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கெனவே வலுத்து வருகின்றன. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லாததால், தற்போது பாலியல் தொழிலுக்கும் இந்த செயலிகள் துணைபோகின்றன.

    இதனால் டிக்டாக், டப்ஸ்மேஷ் போன்ற செயலிகளில் வீடியோ பதிவிடுபவர்கள் ஆபாச வீடியோக்களை பதிவிடுவதை தவிர்த்து, நாகரீகமான வீடியோக்களை பதிவு செய்யலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    Also Watch:


    செய்திகளை உடனுக்குடன் பெற ட்விட்டரில் Follow செய்க.
    வாட்ஸ் அப்பில் பெற Subscribe செய்க.
    வீடியோக்களை யூடியூப்பில் காணSubscribe செய்க

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: