தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: போதிய காவலர்கள் இல்லை - தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் குற்றச்சாட்டு!

புலிகள் காப்பகத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 8:04 AM IST
தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: போதிய காவலர்கள் இல்லை - தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் குற்றச்சாட்டு!
புலி (Image: Tiger World)
Web Desk | news18
Updated: July 30, 2019, 8:04 AM IST
தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புலிகள் காப்பகங்களில் போதிய வேட்டைத் தடுப்பு காவலர்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை சரிசெய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளையும் ஆணையம் அளித்துள்ளது.

சர்வதேச புலிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புலிகள் கணக்கெடுப்பு மற்றும் புலிகள் காப்பக மேலாண்மை குறித்த அறிக்கைகளை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டது.

அந்த விவரங்களின்படி, நாடு முழுவதும் 2,967 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களின் குறைபாடுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதனை சரிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.


சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்

தமிழகத்தின் மிகப்பெரிய சரணாலயமான சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், 60 புலிகள், 800 யானைகள், 111 சிறுத்தைகள் மற்றும் 4 வகையான அரிதான கழுகுகள் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

சரணாலயத்தின் மையப்பகுதி வழியாக, நெடுஞ்சாலை அமைந்துள்ளதால், புலிகள் கொல்லப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் 9 வழிபாட்டுத் தலங்கள் உள்ள நிலையில், அங்கு வரும் பொதுமக்களால் புலிகளுக்கு ஆபத்து இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், சரணாலயம் வழியாக வாகனப் போக்குவரத்தை குறைக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

யானை-மனித மோதல்களைத் தடுக்கும் திட்டத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம்

688 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 20 புலிகள் இருப்பதாக புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த காப்பகத்தின் மையப்பகுதியில் உள்ள கிராமங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதில் ஏற்படும் தாமதத்தால், அங்கு வசிப்பவர்கள் மற்றும் கால்நடைகளால் வனவளம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பகத்தில் 40 விழுக்காடு வேட்டைத் தடுப்புக் காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

முதுமலை புலிகள் காப்பகத்தை மேம்படுத்த முக்கூர்த்தி தேசிய பூங்காவிற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் காலியாக உள்ள வேட்டைத் தடுப்புக் காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

புலிகள்


களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

அடுத்ததாக மேற்கு தொடர்ச்சி மலையில் 1,601 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு அமைந்துள்ளது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்.

இந்த காப்பகத்துக்குள் உள்ள நம்பிகோவில், அகஸ்தியர் கோவில், கோரகநாதர் கோவில் ஆகியவற்றிற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த புலிகள் காப்பகத்தை மேம்படுத்த வன அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். காப்பகத்தின் மையப்பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம்

இதே போல் 1,479 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஆனைமலை புலிகள் காப்பகம். இந்த காப்பகத்தின் மையப்பகுதியில் 33 பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த 1,893 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

காப்பகத்தின் பணியாளர்கள், முறையான வனஉயிர் மேலாண்மை பயிற்சி பெறாமல் உள்ளனர். மேலும், 50 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதனை சரிசெய்வதற்காக காப்பகத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க... புலிகளின் சிறப்புகள் ஒரு தொகுப்பு!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...