ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழில்... கோவையில் TIE அமைப்பின் சார்பாக Green con 2022 ஒரு நாள் கருத்தரங்கம்

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழில்... கோவையில் TIE அமைப்பின் சார்பாக Green con 2022 ஒரு நாள் கருத்தரங்கம்

கோவையில் TIE அமைப்பின் சார்பாக Green con 2022

கோவையில் TIE அமைப்பின் சார்பாக Green con 2022

Green con 2022 : சுற்றுசுழல் பாதிப்பு இல்லாத வகையில் தொழில் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுவதாகவும் புதிய எண்ணத்தை விதைக்கும் விதமாக நடத்தப்படும் இந்த கருத்தரங்கங்கில் 15 பேர் பேச்சாளர்கள் பேச இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சுற்றுசுழலை பாதிக்காத வகையில் தொழில்கள் செய்வது தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் TIE (The Indus Entrepreneurs) அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் நாடுமுழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோவையில் TIE அமைப்பின் சார்பாக Green con 2022 என்ற ஒரு நாள் கருத்தரங்கம் தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று துவங்கியது. இந்த கருத்தரங்கில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து  தொழில் முனைவோர் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தொழில்கள் துவங்கி நடத்துவது தொடர்பாகவும், சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தொழிர் நடத்து வரும் தொழில் முனைவோர் தங்கள் அனுபவங்களை இளம் தொழில் முனைவோருக்கும், மாணவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் இந்த ஒருநாள் கருத்தரங்கு நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

சுற்றுசுழல் பாதிப்பு இல்லாத வகையில் தொழில் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுவதாகவும் புதிய எண்ணத்தை விதைக்கும் விதமாக நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் 15  பேச்சாளர்கள் பேச இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர். எலக்ட்ரானிக்ஸ் இ வேஸ்ட்டை அதிகரிக்காமல் இருப்பது தொடர்பாகவும், இயற்கை பொருட்களை வைத்து அழகு சாதன பொருட்கள் தயாரிப்பது என பல்வேறு தொழில் முனைவோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் .

சுற்றும்புற சூழல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தவும், சூழல் குறித்த அனுபவங்களை பேசுவதற்கான வாய்ப்பாக இந்த கருத்தரங்கம் இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் .

First published:

Tags: Coimbatore, Entrepreneurship