கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், மதுரை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொச்சி செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து நாள்தோறும் மதுரைக்கு 6 விமானங்களும், தூத்துக்குடிக்கு 4 விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சிக்கு தலா 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணம் செய்ய சாதாரண நாட்களில் ஒருவருக்கு, தனியார் பேருந்து கட்டணத்தை விட, இருமடங்கு அதிகமாக இருக்கும். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால், தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரைக்கு ஒருவருக்கு, 3,800 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 10,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதேபோல், தூத்துக்குடிக்கு 4,200 ரூபாயாக இருந்த கட்டணம், 11,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்திற்கு 4,200 ரூபாயாக இருந்த டிக்கெட் விலை, 10,000 ரூபாய் வரையும், கொச்சிக்கு 9,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.
Also read... நாடு முழுவதும் 6,071 ரயில்வே ஸ்டேஷன்களில் வேகமான, இலவச Wi-Fi
இதேபோல், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலரும் கோவாவுக்கு படையெடுப்பதால், அங்கு செல்வதற்கான விமானக் கட்டணமும் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும், அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இருக்கைகள் நிரம்பி, ஒரு சில இருக்கைகளே உள்ளன.
Also read... பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் - வல்லுநர்கள் கருத்து
இது குறித்து கூறும் விமான நிறுவன அதிகாரிகள், தாங்கள் கட்டணங்களை உயா்த்தவில்லை என்றும், விமானங்களில் பல அடுக்கு கட்டணங்கள் இருப்பதையும் தெரிவித்துள்ளனர். அதில், குறைந்த மற்றும் நடுத்தர கட்டணம் கொண்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், தற்போது அதிக கட்டணம் கொண்ட டிக்கெட்டுகள் மட்டுமே இருப்பதாகவும், இதுவே வழக்கமான நடைமுறை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.