முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துணிவு நடிகரின் பெயரில் பேஸ்புக்கில் போலிக் கணக்கு.. பெண்களின் மார்பிங் புகைப்படங்கள்.. சகோதரர்கள் கைது

துணிவு நடிகரின் பெயரில் பேஸ்புக்கில் போலிக் கணக்கு.. பெண்களின் மார்பிங் புகைப்படங்கள்.. சகோதரர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

திரைப்பட நடிகரின் பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு தொடங்கி, பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் கனா மற்றும் துணிவு  திரைப்படங்களில் நடித்த தர்ஷன் பெயரில் பேஸ்புக்கில் கணக்கை தொடங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் நட்பாக பழகி அவரிடம் புகைப்படங்களை பெற்றதாக தெரிகிறது. நாளடைவில், அந்த புகைப்படங்களை மார்பிங் செய்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி 2 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களான அலாவுதீன், வாகித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோன்று, பல பெண்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசி, மடிக்கணினி போன்றவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Kancheepuram