• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அடுத்த 2 மணிநேரத்துக்கு இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்

அடுத்த 2 மணிநேரத்துக்கு இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Weather Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • Share this:
    தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்காலில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    Also Read : 48 மணி நேரத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சகோதரர்கள்!

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

    பாண்டவையாறு (திருவாரூர்), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 5, திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 4, நீடாமங்கலம் (திருவாரூர்), தொழுதூர் (கடலூர்) தலா 3, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), தேவகோட்டை (சிவகங்கை), கொடைக்கானல் சோழவந்தான் (மதுரை), பில்லிமலை (நீலகிரி), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி) தலா 2, சின்னக்கல்லார் (கோவை), தஞ்சாவூர், கமுதி (ராமநாதபுரம்), எடப்பாடி (சேலம்), கரம்பக்குடி (புதுக்கோட்டை), கரூர்.பரமத்தி (கரூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) தலா 1.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: