• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ்... கோலம் போட்டு வாழ்த்தும் பூர்வீக கிராம மக்கள்

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ்... கோலம் போட்டு வாழ்த்தும் பூர்வீக கிராம மக்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு அவரது பூர்வீக கிராம மக்கள் தங்களது வாழத்துகளையும் மகிழ்ச்சியையும் அவர்களது வீடுகளில் கோலங்கள் போட்டு தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    அமெரிக்காவின் துணை அதிபராகும் தகுதியைப் பெற்றுள்ளார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்றது இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளது. அதன்மூலம், அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு தேர்வாகியுள்ள முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் என்ற பெருமையையும் பெறுகிறார் கமலா ஹாரிஸ்.

    55 வயதாகும் கமலா ஹாரிஸின் அம்மா இந்தியாவைச் சேர்ந்தவர். அப்பா ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது ரத்த உறவுகள் சென்னையில் வசிக்கின்றனர். அவர்களின் பூர்வீகம் திருவாரூர் ஆகும்.

    கிராமத்தில் பெண்களும் குழந்தைகளும் தங்களது வீடுகளில் கோலம் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில் இன்று அமெரிக்க துணை அதிபராகவுள்ள கமலா ஹாரீஸ்க்கு தாய்வழி பூர்வீக கிராமம் திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமத்தில் பெண்களும் குழந்தைகளும் தங்களது வீடுகளில் கோலம் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வாழ்த்து கோலங்களில் வணக்கம் அமெரிக்கா, கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகள், பிரைடு ஃபார் அவர் வில்லேஜ் (PRIDE OF OUR VILLAGE) என்ற வாசகங்களை எழுதி வாழ்த்து மழை பெழிந்து வருகின்றனர்.

    மேலும் கமலாவின் வெற்றி மூலம் இந்த கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் நாளை எதிர்பார்த்திருப்பதாகவும் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    மேலும் படிக்க...US election Results 2020 | கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெற குலதெய்வக் கோயிலில் சிறப்பு வழிபாடு

    ஏற்கனவே துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு தர்மசாஸ்தா & அருள்மிகு சேவுகப் பெருமாள் கோயிலில் 2014ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கோவிலில் கிராம மக்கள் நம்பிக்கையோடு வெற்றிச் செய்திக்காக தொடர் பிரார்த்தனை செய்து வந்தனர். குறிப்பாக வெற்றியைக் கொண்டாட இனிப்புகள், பட்டாசு வாங்கி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.













    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்a

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: