• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாலு காசு பார்க்கதான் ரஜினி ரசிகர்கள் தி.மு.க, அ.தி.மு.கவில் இணைகின்றனர் - துக்ளக் கட்டுரையில் கடும் விமர்சனம்

நாலு காசு பார்க்கதான் ரஜினி ரசிகர்கள் தி.மு.க, அ.தி.மு.கவில் இணைகின்றனர் - துக்ளக் கட்டுரையில் கடும் விமர்சனம்

துக்ளக் கட்டுரை

துக்ளக் கட்டுரை

ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் ஒன்றும் தியாகத்தின் திருவுருவங்கள் அல்ல என்று துக்ளக் வார இதழ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

  • Share this:
    ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 25 ஆண்டுகளாக அவரை வலியுறுத்திவந்தனர். இந்தநிலையில், அரசியலுக்கு வருவதாக உறுதியளித்த மூன்று வருடங்களுக்கு முன்னர் உறுதியளித்த ரஜினிகாந்த், கொரோனா பாதிப்பையும், உடல்நலம் சரியில்லை என்பதையும் காரணமாகக் கூறி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டார். அதனையடுத்து, அவரது ரசிகர்கள் தி.மு.கவிலும் அ.தி.மு.கவிலும் இணைந்துவருகின்றனர். இதனை விமர்சனம் செய்து துக்ளக்கில் கட்டுரை வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில், ‘ரஜினிகாந்த் ‘தான் அரசியலுக்கு வரவில்லை என்பதை அறிவித்தாலும், அறிவித்தார். இதுதாண்டா சமயம் என்று, அவரது ரசிகர் மன்றத்தின் படை படையாக, தி.மு.க, அ.தி.மு.கவிலும் சேர்ந்துவருகின்றனர். சமீபத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.கவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளனர். எந்த ஊழலை ஒழிக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்தாரோ, அந்த ஊழலின் பிறப்பிடமான தி.மு.கவிலேயே அவரது ரசிக சிகாமணிகள் சேர்ந்தது சிலருக்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம். இதில் அச்சர்யமென்ன வேண்டிக் கிடக்கிறது. ரஜினி வேண்டுமானால், தேசியவாதியாக, ஆன்மீகவாதியாக, அரசுக்கு ஒழுங்காக வரி செலுத்தும் நேர்மையாளராக இருக்கலாம். ஆனால், அவருடைய ரசிகர்கள் ஒன்றும் காமராஜ், கக்கன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர்களல்ல. தலைவா வா.. தலைமையேற்க வா.., இப்போது இல்லையென்றால் எப்போதுமே இல்லை’ என்று விதிவிதமாக ஆளுயர போஸ்டர்களையெல்லாம் ஊருக்கு ஊர் அச்சடித்து ஒட்டிய ரஜினி ரசிர்கள் ஒன்றும் தியாகத் திருவுருக்கள் அல்ல. எந்த ஆதாயத்தையும், எதிர்பார்க்காமலா இதையெல்லாம் செய்திருப்பார்கள்? நல்ல வேளையாக ரஜினி தப்பித்தார்.

    எல்லா கட்சிக்காரர்களையும் போலத்தான் அவர்களுக்கும் அரசியல் என்பது பணம் பண்ணுற வழி. அதனால்தான் இத்தனை அவசர அவசரமாக கட்சிகளில் இணைந்துவருகிறார்கள். சர்காரியாக கமிஷனால் கூறப்பட்ட ஊழல்கள், 2 ஜி ஊழல்கள், நில அபகரிப்புகள் என்று சகல தகிடுதத்தங்களிலும் கைதேர்ந்த தி.மு.க, உச்ச நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளான மறைந்த ஜெயலலிதா, சசிகால இத்யாதிகளைக் கொண்ட அ.தி.மு.க என்று இப்படி ஊழல் கட்சிகளைத் தேடிப் போய்ச் சேர வேறு எண்ண காரணம் இருக்க முடியும். இந்த ஊழல் கட்சிகளில் சேர்ந்து ஏதோ வட்டச் செயலாளர் வார்டு செயலாளர் என்று ஆனால்கூட நாலு காசு சம்பாதிக்கலாம் என்று கணக்குப்போட்டுதான் பிற கட்சிகளில் சேர்ந்துவருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

    சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாட்டுக்காக சொத்து சுகங்களை இழந்த மாதிரி, இந்த 2021-லும் எல்லாவற்றையுஃம இழந்து நிற்க ரஜினி ரசிகர்கள் என்ன அசட்டு அம்மாஞ்சிகளா? நாடு எக்கேடு கெட்டால் என்ன? நாடு, மக்கள் என்று அலைந்தால் வீட்டைக் கவனிப்பது யார்? அட்லீஸ்ட் போஸ்டர் அடித்தும், பேனர் வைத்தும் செலவு செய்த காசையாவது திரும்ப எடுக்கவேண்டாமா?’ என்று மிகக் காட்டமாக விமர்சனம் செய்துள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: