ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது

மாதிரி படம்

மாதிரி படம்

கடலூரில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதியில் இளைஞர்கள் மூன்று பேர் பிளாஸ்டிக் குழாயில் துப்பாக்கி தயாரித்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கற்கள் மற்றும் பிளாஸ்டிக் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.

  அவர்கள் புதுப்பாளையத்தை சேர்ந்த சிவப்பிரகாசம், வினோத்குமார் மற்றும் வெற்றிவேல் என்பது தெரியவந்தது. முயல் வேட்டைக்காக நாட்டுத்துப்பாக்கி தயாரிக்க யூடியூப் பார்த்த இவர்கள் பொருட்கள் கிடைக்காததால் பிளாஸ்டிக் குழாய்களைக் கொண்டு துப்பாக்கியை தயாரித்ததாக தெரிவித்தனர்.

  மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 4 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

  Also read... 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Cuddalore