விழுப்புரத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 இளைஞர்கள் கைது!

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

  • Share this:
    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விவகாரத்தில், 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

    வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு கடந்த 14ம் தேதி பிறந்த நாள் வந்துள்ளது. இதனை வித்தியாசமாக கொண்டாட நண்பர்கள் நினைக்க, ஊரடங்கை பொருட்படுத்தாமல் கூட்டமாக நின்று சாலையின் நடுவே பட்டா கத்தியால் கேக் வெட்டியுள்ளனர்.

    இதனை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து சமூக வளைதளங்களிலும், நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில். மணிகண்டன் உள்பட ஏழு பேர் மீது அரகண்டநல்லூர் போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் மணிகண்டன் அவனது நண்பர்கள் தமிழழகன், பாண்டியன் ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published: