ஒரே வகையான நெல்லில் 3 விதமான விளைச்சல்: கலப்பட நெல் விதையால் அதிர்ச்சியடைந்த விவசாயி

பாதிக்கபட்ட நெல்லை கலப்பட விதைகளை உற்பத்தி செய்த தனியார் நிறுவனமே பெற்று கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Web Desk | news18
Updated: August 15, 2019, 4:14 PM IST
ஒரே வகையான நெல்லில் 3 விதமான விளைச்சல்: கலப்பட நெல் விதையால் அதிர்ச்சியடைந்த விவசாயி
பாதிக்கபட்ட நெல்லை கலப்பட விதைகளை உற்பத்தி செய்த தனியார் நிறுவனமே பெற்று கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Web Desk | news18
Updated: August 15, 2019, 4:14 PM IST
குன்னத்தில் கலப்பட நெல் விதையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தபட்ட விதை நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும், கலப்பட நெல்லை அந்நிறுவனமே கொள்முதல் செய்யவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி விஸ்வநாதன். இவர் தனக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் அரசின் அங்கிகாரம் பெற்ற கோ-51 ரக நெல் விதையை வாங்கி குருவை சாகுபடி செய்துள்ளார்.

இதே போல குன்னம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலரும் அதே ரக நெல் விதைகளை வாங்கி பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் குன்னத்தில் விவசாயிகள் பயிரிட்ட கோ-51 ரக நெல்லில் 55 நாட்களில் கதிர் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த விவசாயி விஸ்வநாதன் தனது வயலை முழுமையாக ஆய்வு செய்த போதுதான் 3 விதமாக நெல் பயிற்கள் விளைந்திருப்பது தெரியவந்தது.


இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஒரே நாளில் விதைக்கப்பட்ட நெல் விதைகளில் ஒன்று கதிர்வந்து முற்றிய நெல் மணிகளாகவும், அதன் அருகிலேயே பூவைத்த நிலையில் ஒரு நெற்பயிரும், மற்றொரு புறம் வளர்ச்சியடையாத நெற்பயிற்களுமாக என 3 விதமான  நெற்பயிர்கள் இருந்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட விதை விற்பனை நிறுவனத்தை அணுகி கேட்டபோது அப்படி இருக்காது எனவும் வேளாண்மைதுறை அதிகாரிகள் மற்றும் விதை உற்பத்தி நிறுவன அதிகாரிகளிடம் ஆய்வுசெய்ய பரிந்துறைப்பதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த விதை உற்பத்தி நிறுவனத்தின்  ஊழியர் இதனால் பாதிப்பு வராது நல்ல மகசூல் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பயிரை ஆய்வு செய்த வேளாண்மைதுறை அதிகாரிகளோ இதில் 3 விதநெல் கலப்படம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Loading...

இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அனைத்து பயிற்களும் முற்றிய பின்னரே அறுவடை செய்ய முடியும் என்ற நிலையில் இதுவரை கதிர்வராத பயிற்களை என்ன செய்வது என புறியாமல் தவித்து நிற்கின்றனர். மேலும் அறுவடை செய்தாலும் பொது சந்தையில் இந்த நெல்லை விற்பது கடினம் எனவும் முதல் கூட கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே பாதிக்கபட்ட நெல்லை கலப்பட விதைகளை உற்பத்தி செய்த தனியார் நிறுவனமே பெற்று கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசு அங்கிகாரம் பெற்ற நெல் விதை என்பதால் தனியார் நெல் விதைகளை விவசாயிகள் நம்பி வாங்கி வருகின்றனர். இதுபோன்ற கலப்பட விதை மற்றும் தரமற்ற விதைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: பிரசன்ன வெங்கடேசன்

மேலும் படிக்க...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...