Home /News /tamil-nadu /

அன்பழகன் மறைவு - சட்டமன்றத்தில் காலியிடம் மூன்றாக உயர்வு

அன்பழகன் மறைவு - சட்டமன்றத்தில் காலியிடம் மூன்றாக உயர்வு

அன்பழகன்

அன்பழகன்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உயிரிழந்ததன் மூலம், தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் மூன்றாக உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் கடந்த 2-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

    இதனால் தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் மூன்றாக உயர்ந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர், நியமன உறுப்பரையும் சேர்த்து மொத்தம் 235 உறுப்பினர்கள் உள்ளனர்.

    இந்த ஆண்டு துவக்கத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன் (குடியாத்தம்) , கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) மரணமடைந்ததை அடுத்து சட்டமன்றத்தில் 2 இடங்கள் காலியானது.

    தற்போது ஜெ. அன்பழகன் மரணமடைந்ததன் மூலம் காலி இடங்கள் 3 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழக சட்டப்பேரவையில் தற்போது கட்சிகளின் பலம்

    அதிமுக - 124
    திமுக - 97
    காங்கிரஸ் - 7
    இந்திய யூனியன் முஸ்லீன் லீக் - 1
    சுயேட்சை - 1
    நியமன உறுப்பினர் - 1
    சபாநாயகர் - 1
    காலி இடம் - 3

    மேலும் படிக்க...

    திமுக எம்.எல்.ஏ அன்பழகன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: DMK, TN Assembly

    அடுத்த செய்தி