முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மூன்றுவகையான இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவுகின்றன... அமைச்சர் மா.சுப்ரமணியன்

மூன்றுவகையான இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவுகின்றன... அமைச்சர் மா.சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டில் H1N1 இன்புளுயன்சா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சல் பற்றிய அச்சம் வேண்டாம் என்றும், தேவையான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது மக்களை அச்சுறுத்தி வருகிறது இன்புளுயன்சா காய்ச்சல். இந்த காய்ச்சலில், இன்புளுயன்சா ஏ H1N1, இன்புளுயன்சா ஏ H3N2, இன்புளுயன்சா பி விக்டோரியா என 3 வகைகள் உள்ளன.

மார்ச் 9ஆம் தேதி வரை, நாடு முழுவதும் 3,038 பேருக்கு H3N2 உள்ளிட்ட இன்புளுயன்சா வகை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் ஜனவரியில் 1,245 பேருக்கும், பிப்ரவரியில் 1,307 பேருக்கும் மார்ச் மாதத்தில் 486 பேருக்கும் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதி வரை, 955 பேருக்கு இன்புளுயன்சா ஏ H1N1 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 545 பேர் பேருக்கும், மகாராஷ்டிராவில் 170 பேருக்கும், கேரளாவில் 42 பேருக்கும், பஞ்சாப்பில் 28 பேருக்கும் பாதிப்பு இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் பின்பற்றியபோது போன்ற தடுப்பு வழிமுறைகளை தற்போது கடைபிடிக்க வேண்டும் என்றும், காய்ச்சல் முகாம்களை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம், 2,663 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்புளுயன்சா பாதிப்பு உள்ளவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருச்சி மாவட்டத்தில் 7 பேருக்கு இன்புளுயன்சா ஏ H1N1 பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000... பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பாமக!

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தேவையான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

First published:

Tags: Ma subramanian