கோவில்பட்டியில் துப்பாக்கி, அரிவாள் உடன் சோதனைச் சாவடியில் சிக்கிய நபர்கள்

கோவில்பட்டியில் துப்பாக்கி, அரிவாள் உடன் சோதனைச் சாவடியில் சிக்கிய நபர்கள்

கைது செய்யப்பட்ட மூவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சோதனைச்சாவடியில், காரில் துப்பாக்கியுடன் வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டி விலக்கு சோதனை சாவடியில் நேற்றிரவு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கார் டிரைவரிடம் விசாரணை நடத்திய போது ஈரோட்டில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக நெல்லைக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். அதற்கான இ.பாஸ்யும் போலீசாரிடம் காண்பித்துள்ளார். டிரைவர் பேச்சு சந்தேகிக்கும் வகையில் இருந்த காரணத்தினால் போலீசார் காரில் சோதனை செய்த போது காரில் இருவர் இருந்துள்ளார்.

தொடர்ந்து போலீசார் சோதனை நடத்திய போது காரில் ஒரு துப்பாக்கி, 5 தோட்டக்கள், 2 அரிவாள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயதங்களை கைப்பற்றியது மட்டுமின்றி காரையும் பறிமுதல் செய்தனர்.

Also read... வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வீட்டின் சமையலறையில் தஞ்சமடைந்த வங்கப் புலி மீட்பு

மேலும் 3 பேரையும் கைது செய்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று டி.எஸ்.பி. கலைகதிரவன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் நெல்லை தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்த ராஜ்குமார் என்ற குமளி ராஜ்குமார்(38), பாளையங்கோட்டை பட்டப்பகுறிச்சயை சேர்ந்த வினோத்(26), நெல்லை கொக்கிரகுளம் மேலநத்ததை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்தது.

துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்பதும் தெரியவந்ததது. இதில் ராஜ்குமார் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் இவர் தேவேந்திர குல வேளாளர் மக்கள் இயக்க தலைவராக இருந்து வருகிறார். துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது, எதற்காக ஆயுதங்கள் கொண்டு சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: