சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம்(65). இவர் ஓய்வு பெற்ற டிஎன்பிஎஸ்சி ஊழியர்.
இவர் கோட்டூர்புரம் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்து அதில் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேலாக பணம் சேமித்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் இந்தியன் வங்கியின் மேலாளர் பேசுவதாக கூறி இவரது மொபைல் எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது.
போனில் பேசிய நபர் உங்களது வங்கி ஏ.டி.எம் கார்டை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி உடனடியாக கார்டின் மேல் உள்ள 16 நம்பரை சொல்லும் படியாகவும் மேலும் மொபைலுக்கு தொடர்ச்சியாக வரும் நான்கு இலக்க எண்ணை தெரிவிக்கும்படியும் மர்ம நபர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சதாசிவம் தொடர்ச்சியாக மொபைலுக்கு வந்த ஓ.டி.பி எண்ணை கூறியுள்ளார். பின் தொடர்ச்சியாக இவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5,000, ரூ.8,000, ரூ.10,000, ரூ.25,000 என தொடர்ச்சியாக பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
அக்கம்பக்கத்தினரிடம் காட்டியபோது வங்கி மேலாளர் போல் பேசி சதாசிவத்தை ஏமாற்றியது தெரிய வந்தது.
இதனையடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சதாசிவம் புகார் அளித்தார். இந்த நிலையில் இன்று காலை இரண்டு புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது எனவும் அதில் பேசிய மர்ம நபர்கள் தன்னிடம் உள்ள ஏடிஎம் கார்டு தகவல்களை கேட்டதாகவும் பின் இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
இதேபோல சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியை சேரந்தவர் மருத்துவர் லீலா ராமகிருஷ்ணன் (45). இவர் வீட்டின் அருகே ஒரு கிளினிக் நடத்தி வருகின்றார். லீலா பல்லாவரத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று லீலா செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வங்கி கணக்கில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளதாக குறிப்பிடபட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிரச்சியடைந்த லீலா இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரண்டு சம்பவம் குறித்தும் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் வசித்து வருபவர் சுகன்யா(25). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து வருகின்றார். இவர் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சுகன்யாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர் இந்தியன் வங்கியிலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். பின்னர் ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டதால் அதனை புதுபிக்க வேண்டும் என வங்கி எண், ஏடிஎம் கார்டு எண், கடவு சொல்லை கேட்டுள்ளார். இதனை நம்பிய சுகன்யா அனைத்தையும் அந்த நபரிடம் கூறியுள்ளார்.
பின்னர் சுகன்யா வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 84ஆயிரம் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் சுகன்யா அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.