Home /News /tamil-nadu /

சென்னை அடையாற்றில் மணல் திருட்டு: மூன்று லாரிகள் சிறைபிடிப்பு: திமுக தரப்பில் புகார்

சென்னை அடையாற்றில் மணல் திருட்டு: மூன்று லாரிகள் சிறைபிடிப்பு: திமுக தரப்பில் புகார்

மணல் கொள்ளை

மணல் கொள்ளை

சென்னை அடையாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக நான்கு லாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அடையாறு ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் ஏற்றிச்செல்வதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் நேற்றிரவு 3 லாரிகளில் மணல் எடுத்து செல்லப்படுவதை அறிந்த அபிராமபுரம் காவல்துறையினர் 3 லாரிகளையும் மடக்கிப்பிடித்தினர். அந்த லாரிகளில் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரிகளை ஓட்டி வந்த காளியப்பன், பொன்பாண்டி மற்றும் பழனி ஆகிய ஓட்டுனர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் ஓடும் இந்த லாரிகள் முறையாக அனுமதி பெற்று இருக்கிறார்களா எனவும் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடையாறு ஆற்றங்கரை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வரும் சூழலில் மணலை எடுத்து செல்ல அனுமதி அளித்தது யார்? மணல் எங்கு எடுத்து செல்லப்படுகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்த தி.மு.கவைச் சேர்ந்த சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ட்விட்டர் பதிவில், ‘இது தொடர்பாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே இரவு நேரங்களில் சில காவல்துறையினரின் உதவியோடு மணல் கடத்தப்பட்டு வருவதாக உயரதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Sand mafia

அடுத்த செய்தி