மாநில உரிமைகள் மீது மோடி போட்டிருக்கும் முதல் குண்டு தேசிய கல்விக்கொள்கை என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இந்திய மாணவர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் சென்னை பெரியார் திடலில் வரைவு தேசியக்கல்வி அறிக்கை 2019-ன் தமிழ் பிரதி நூல் வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.விரமணி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கல்வியாளர்கள் வசந்தி தேவி, பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஜனநாயகத்தின் மீது, மாநில உரிமைகள் மீது மோடி போட்டிருக்கும் முதல் குண்டு தேசிய கல்விக்கொள்கை. 30 நாட்களில் கருத்து சொல்லவேண்டும் என்பது இயலாதது, இது மிக மோசடியான செயல். 22-ம் தேதி அவசரமாக கல்வியாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. எத்தனை மாநில கல்வி அமைச்சர்கள் இந்த வரைவுக் கல்விக்கொள்கையை முழுமையாக படித்துள்ளனர்? 22-ம் தேதி கல்வி அமைச்சர் சென்றால் என்ன பேச போகிறார்? தமிழக அரசு இதில் என்ன கருத்து கொண்டிருக்கிறது? இந்தக் கல்வி கொள்கையை மாநில அரசு நிராகரிக்க வேண்டும்.
இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றி அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சாதித்துள்ள நிலையில், எதற்காக மும்மொழிக்கொள்கை எனவும், 3-6 மாதங்கள் வரை கல்வியாளர்கள் விவாதிக்க அவகாசம் தேவை’’ என்றார் கி.வீரமணி.
மேலும் பார்க்க...
Published by:Ilavarasan M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.