• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கரூர் அருகே தனியார் நிலத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

கரூர் அருகே தனியார் நிலத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

கரூர் அருகே தனியார் நிலத்தில் உள்ள சிறிய குளத்தில், ஆடு மேய்க்க சென்ற சகோதரர்கள் உட்பட 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால், கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

  • Share this:
    கரூர் மாவட்டம் லாலாபேட்டை அடுத்த புனவாசிபட்டி 4 ரோடு பகுதியைச் சேர்ந்த கவின் (12), வசந்த் (11) இருவரும் சகோதர்கள். அவர்களுடன் நவீன் (13) ஆகிய மூன்று சிறுவர்களும் அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில், அருகில் தனியார் நிலத்தில், குளித்தலை பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர்செல்வத்தின் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை பணிகளுக்காக 10 அடி ஆழம் அளவிற்கு செம்மன் வெட்டி எடுக்கப்பட்டது.

    தற்போது அது குளம்போல் உள்ளது. குளத்தின் அருகே ஆடு மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது, ஆடுகள் தண்ணீரில் இறங்கி கத்தியுள்ளது. இகைக் கண்ட சிறுவர்கள் ஆடுகளை மீட்க குளத்தில் இறங்கியுள்ளனர். குளத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால் மூன்று சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் புனவாசிப் பட்டி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த சிறுவர்களின் உடலை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    Also Read : மயிலாடுதுறையில் மாணவர்களை அடித்தவிவகாரம்; பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

    இச்சம்பவம் குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக அந்தக் குளம் போல் உள்ள இடத்தை மூட வேண்டும் அல்லது சுற்றி வேலி அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    செய்தியாளர் : தி.கார்த்திகேயன், கரூர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: