பழிக்குப்பழி... சேலத்தில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை செய்த மூன்று பேர் கைது...

கொலையாளிகள் கார்த்திக், விக்னேஷ், அந்தோனி.

சேலத்தில் இளைஞர் ஒருவரை ஓடஓட விரட்டி ஒரு கும்பல் படுகொலை செய்துள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னமாயகுளத்தைச் சேர்ந்தவர் எடிசன் (23). ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி எடிசன், அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (28) தேவகுமார் (27) ஆகியோரால் ஓடஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கோபிநாத்தின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை எடிசன் கிண்டல் செய்ததாகவும் கண்டித்தும் கேட்காததால் படுகொலை செய்ததாகவும் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

  எடிசனும், கோபிநாத்தும் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கஞ்சா விற்பனையில் யார் பெரிய ஆள் என்ற போட்டியில் எடிசன் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கொலை வழக்கில் கொலையாளிகளான கோபிநாத்தும், தேவகுமாரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். தினசரி சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

  Also read: சேலத்தில் கடன் சுமையால் 6 மாத ஆண் குழந்தையை விற்ற தந்தை.. மூவர் கைது..

  இந்நிலையில், கடந்த 6ம் தேதி தொடங்கி சேலம் சுப்ரமணிய நகரில் தங்கி சூரமங்கலம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். செவ்வாய்க்கிழமை மாலை இருவரும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு அறைக்குத் திரும்பி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருவரையும் விரட்டத் தொடங்கியது. பீதியில் இருவரும் தலைதெறிக்க ஓடத் தொடங்கியபோது, தேவகுமார் திடீரென வலதுகை பக்கம் திரும்பித் தப்பிச்சென்றார்.  ஓடிக்கொண்டிருந்த கோபிநாத் கால் தடுக்கி கீழே விழ, அந்தக் கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பியோடியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  தகவல் அறிந்த போலீசார் கோபிநாத் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த கொலையாளிகள் கார்த்திக், விக்னேஷ், அந்தோனி ஆகிய 3 பேரை பள்ளப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். எடிசனைக் கொலை செய்ததற்கு பழிதீர்ப்பதற்காகவே கோபிநாத்தை கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
  Published by:Rizwan
  First published: