HOME»NEWS»TAMIL-NADU»three arrested for interview a woman for talking obscenely sur

பெண்ணிடம் ஆபாச பேச்சு: யூடியூப் சேனல் குழுவினர் மூன்று பேர் கைது

இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெண்ணிடம் ஆபாச பேச்சு: யூடியூப் சேனல் குழுவினர் மூன்று பேர் கைது
கைது செய்யப்பட்ட நபர்
  • Share this:

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்த யூடியூப் சேனல் குழுவினர் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

2020 எப்படி போனது என்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர். அதில் ஒரு பெண்ணிடம் பேசியது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்ற பெண் அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க...‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர் கண்டுபிடிப்பு



இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Published by:Suresh V
First published: