தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே நடமாடிய 8,000 பேர் கைது... 1400 வழக்குகள் பதிவு!

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், உத்தரவை மீறி வெளியே நடமாடியதாக ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே நடமாடிய 8,000 பேர் கைது... 1400 வழக்குகள் பதிவு!
சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்.
  • Share this:
ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றாமல், தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்ததாக, தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24-ம் தேதி மாலை ஆறு மணி முதல் இத்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய் மற்றும் புதன் இரண்டு நாட்களில், 144 தடையை மீறியதாக 1,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதுதவிர வைரஸ் தொற்று தொடர்பாக பீதியை கிளப்பியதாக, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எட்டு பேரை போலீசார் எச்சரித்துள்ளனர்.


அதேபோல வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், உத்தரவை மீறி வெளியே நடமாடியதாக ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 53 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்