Home /News /tamil-nadu /

சித்திரை அமாவாசை மற்றும் வார விடுமுறை - தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

சித்திரை அமாவாசை மற்றும் வார விடுமுறை - தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சித்திரை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடினர். முகக்கவம் அணிந்தவர்கள் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

  • News18
  • Last Updated :
    சித்திரை அமாவாசை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

    சித்திரை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடினர். முகக்கவம் அணிந்தவர்கள் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

    கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடினர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    Also read... மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் தள்ளு உண்டியலில் குவிந்த காணிக்கை.. எவ்வளவு தெரியுமா?

    மேலும் வார விடுமுறையை முன்னிட்டு தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தனுஷ்கோடி மற்றும் அக்னி தீர்த்த கடலில் குளிப்பவர்கள் ஆழமான பகுதிக்குச் செல்லாமல் இருக்க கடற்கரை ஓரங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    -செய்தியாளர்: சேது குமரன்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Dhanushkodi, Rameshwaram

    அடுத்த செய்தி