ஞாயிறு விடுமுறை மற்றும் ஆடியையொட்டி ராமேஸ்வரத்தில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளித்ததை போல் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராட தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து சுவாhமி தரிசனம் செய்து வந்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் இருந்து ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததையடுத்து கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம்வுரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Also read: Today Rasi Palan: இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஜுலை 25, 2021)
இந்நிலையில் இன்று ஆடி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ராமநாத சுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பின் கோவிலுகுள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இன்று காலை 6 மணி முதல் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்ததையடுத்து அதிகமான சுற்றுலா பயணிகள் தனுஸ்கோடி சென்று வருகின்றனர்.
ஆனால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட தடை நீட்டித்து வருவதால் இன்று சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராடல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தமிழக அரசு உடனடியாக ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் யாத்திரை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் - சேது குமரன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.