முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குடும்பத் தலைவிகளுக்கான ₹1000 உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்.. ?

குடும்பத் தலைவிகளுக்கான ₹1000 உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்.. ?

மாதிரி படம்

மாதிரி படம்

அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இந்த நிதி கிடையாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தைனைகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளில் இருந்து குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கியுள்ள நிலையில் நிதி நிலையால் இந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் காலம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த திட்டம் வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.

யாருக்கெல்லம் ரூ.1000 வழங்கும் திட்டம் பொருந்தும்?

பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை நிதித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்தப் பணி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. பி.எச்.எச். என்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (அதாவது 35 கிலோ அரிசி வாங்குபவர்கள்) ரூ.1,000 கிடைக்கும்.

அதே நேரத்தில் இந்த திட்டத்தை பெறுவதில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானம் ஆகியவையும் கணக்கிடப்படும் என்று கூறப்படுகிறது.அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்காது. புதுமைப்பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவிகளின் தாயார் இந்த திட்டத்தில் பயன்பெற தடை எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

எப்படி தொகையை பெற்று கொள்ளலாம்?

60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை வழங்குவதிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. குடும்பத்தலைவிகளுக்குதான் உரிமைத் தொகை என்பதால், ரேஷன் அட்டையில் எதுவும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் வருமான வரி செலுத்துவோருக்கு இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்தில் இடம் பேரமாட்டார்கள் என கூறப்படுகிறது.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில்ம் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Tamilnadu government, TN Budget 2023